கல்பிட்டி பிரதேசத்திற்கு உட்பட்ட ஏத்தாளை கிராமத்தில் இரண்டு பாடசாலைகள் உள்ளன..
ஒன்று திகழி முஸ்லிம் மகா வித்தியாலயம்.
மற்றது கொலனி ரோமன் கத்தோலிக்க கலவன் பாடசாலை.
இவை இரண்டிலும் சுமார் 2500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கற்கின்றனர்.
இருந்த போதும் இவர்களுக்கு வருடாந்த இல்ல விளையாட்டு போட்டிகளை நடத்த கூட விளையாட்டு மைதானம் ஒன்று இல்லாத நிலை தொடர்கிறது.
அத்தோடு இந்த குறை பாடசாலை மாணவர்களுக்கு மாத்திரம் அன்றி, ஏனைய விளையாட்டு வீரர்களுக்கும் பெரும் குறையாகவே உள்ளது.
பெருநாள் தினங்களில் ஒரு விளையாட்டு நிகழ்வை நடத்த கூட முடியாத ஒரு துர்பாக்கிய நிலைக்கு நாம் தள்ள பட்டுள்ளோம்.
இந்த நேரம் இதற்கு நாம் எப்படி தீர்வு பெறுவது என்று யோசித்த போது நமக்கு விளங்கிய ஒரு விடயம் தான் ஏத்தாளை 'தாமரை குளம்" .
பல வருட காலமாய் மக்களுக்கு பிரயோசனம் அற்று இருக்கும் , இரண்டு மூன்று தடவை புனர் நிர்மாணம் செய்தும் மீண்டு ம் மீண்டும் புள் வளரும் இந்த குளத்தை நிரப்பி அதில் சகல விளையாட்டுக்களும் இடம் பெரும் ஒரு மைதானம் உருவாக்கினால் என்ன?
இதில் சட்ட சிக்கல்கள் இருக்கும் நிலையில் இந்த சட்ட சிக்கல்களை தீர்த்து ஒரு முடிவுக்கு வர முடியுமா ?
இதனை யாரிடம் முன் வைப்பது ?
போன்ற விடயங்கள் இருக்கும் நிலையில் உங்கள் கருத்து என்ன என்பதை அறியவும் ஆவலாய் உள்ளோம்.
ஒரு சிலர் எடுக்கும் முயற்சியால் மட்டும் இதனை நிவர்த்தி செய்ய முடியாது, உங்களின் ஒத்துழைப்புக்களையும் எதிர் பார்க்கிறோம்.
ஏனைய பகுதியில் உள்ள சட்டம் தெரிந்த நண்பர்களின் கருத்துக்களையும் எதிர் பார்க்கிறோம்.
இப்படிக்கு...
உங்களில் ஒருவன்.
எம்.ஐ.எம்.இனபாஸ்.
(15.02.2015)
( இந்த விடயத்தை தாம் தான் செய்ய வேண்டும் , வேறு யாரும் செய்து விட கூடாது என்று நினைப்போரும் தாரளாமாய் செய்யலாம். யார் மூலமேனும் சமூகம் நன்மை பெறட்டும்)


0 Comments