ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது கடமைகளை பொறுப்பேற்ற பின் முதன் முதலாக அடுத்த வாரம் (மார்ச் 3ம் திகதி) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால தலைமையில் யாழ் அபிவிருத்தி குழு கூட்டம் யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெறவுள்ளது.
இந்த கூட்டத்தில் வட மாகாண முதல் அமைச்சர் உட்பட மாகாண அமைச்சர்கள் பங்கேற்கவுள்ளனர்.
ஜனாதிபதியுடன் அமைச்சர்கள் ஒன்பது பேர் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளனர்.
இங்கு தமிழ் மக்கள் எதிர்நோக்கும் அன்றாட பல முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படவிருப்பதாக தெரியவருகின்றது.


0 Comments