தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவின் மனைவி சஷி பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டிய, சஷி வீரவன்சவிற்கு பிணை வழங்கி உத்தரவிட்டார்.
அதன்படி, 15,000 ரூபா ரொக்கப் பிணை, 5 லட்சம் ரூபா சரீரப் பிணையிலும் சஷி வீரவன்ச விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
மேலும் மாதாந்தம் நீதிமன்ற பதிவாளர் முன் ஆஜராக வேண்டும் என்றும் சாட்சியாளர்களை அச்சுறுத்தக் கூடாதெனவும் நீதவான் நிபந்தனை விதித்துள்ளார்.
சசி வீரவன்சவின் உடல் நிலையை கருத்திற் கொண்டு அவருக்கு பிணை வழங்குமாறும், அவருக்கு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று கொள்ள அனுமதிக்குமாறும் கோரப்பட்டிருந்தது.
அத்துடன், அவரை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றும் கோரிக்கையையும் நீதவான் நேற்று நிராகரித்திருந்தார்.
போலி ஆவணங்களையும் தகவல்களையும் சமர்ப்பித்து தேசிய அடையாள அட்டைகள், இராஜதந்திர மற்றும் சாதாரண கடவுச்சீட்டுக்களை பெற்றுக்கொண்டதாக சசி வீரவன்ச மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.


0 Comments