Subscribe Us

header ads

விஸ்வரூபம் பெரும் கிழக்கு முதல்வர் யார்


விஸ்வரூபம் பெரும் கிழக்கு முதல்வர் யார் எனும் வினாவிற்கு இன,மத,பிரதேச வாதத்தை கக்கி தமிழ் ,முஸ்லிம் மக்கள் பிட்டும் தேங்காய்ப்பூவும் போல வாழ்வதை கெடுக்க முயற்சிக்காமல் அர்சியல் முதுசங்கள் செயற்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சியின் தேசிய கொள்கை பரப்பு செயலாளர் எமது ஊடகத்திற்கு தெரிவித்தார். மேலும் தனது செய்தியில் இலங்கை மக்களின் ஆசைகளும்,தேவைகளும்,உரிமைகளும் வழங்க புதிய அரசு தயாராகி கொண்டிருக்கும் இவ்வேளையில் இன வாதத்தையும் பிரதேச வாதத்தையும் நாம் கலைந்து சமாதான சூழ்நிலையில் தமது உரிமைகளை பெற முயற்சிக்க வேண்டும்.

நேற்றைய (பெப்ரவரி 4) சக்தி செய்தியின் போது தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற குழுத்தலைவர் கௌரவ இரா.சம்பந்தன் அவர்களின் கருத்துப்படி தேர்தலில் இரண்டு மாவட்டங்களில் முதலிடத்தை பிடித்து மு.கா கட்சியைவிட 60 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றோம்.எங்களுக்கே முதலமைச்சர் தர வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்தார்.அதே போன்று பழைய அரசை ஆரம்பம் முதல் எதிர்த்து வந்தவர்கள் நாங்களே.மு.கா வை போல சந்தர்ப்பதிற்கு மாற வில்லை அதனால் இந்த பதவிக்கு நாங்களே தகுதியானவர்கள்,மஹிந்த அரசில் பல துயரங்களை அனுபவித்தவர்கள் என கூறுகிறார்.

அத்துடன் முஸ்லிம் மக்களின் உரிமைகளை மதிப்பவர்கள் எப்போதும் மதிப்போம் என கூறும் தமிழ் அரசு கட்சி முஸ்லிம் மக்கள் பட்ட துன்பங்களை நன்றாக நினைத்து பார்ப்பதுதான் இந்த சூழ்நிலைக்கு ஏற்றது என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன்,அத்துடன் வடமாகாண சபையை தமிழரசு கட்சி சிறப்பாக நடாத்த சகல முஸ்லிம் மக்களும் முழு அர்பணிப்பை தருவதையும்,தமிழ் மக்கள் அதிகமாக வாழும் வட மாகாணத்தை தமிழ் மகன் ஆளுவது போல முஸ்லிம் மக்கள் வாழும் கிழக்கு மண்ணை தமிழை தான் சுவாசமாக மதித்து வாழும் முஸ்லிம் மகனை ஆட்சிபீடத்தில் அமர்த்த எந்த காழ்ப்புணர்சிகளுமில்லாமல் முழுமனதுடன் இப்பதவியை முஸ்லிம் மக்களுக்கு வழங்க தமிழ் பேசும் மக்களின் உரிமை குரலாக இருந்து வரும் தமிழரசு கட்சி முன்வரவேண்டும் என கேட்டு கொள்கிறேன்.

 தமிழ்,முஸ்லிம் மக்களின் ஒற்றுமைதான் இந்த அரசை நிறுவி இருப்பது உலகறிந்த உண்மை. இந்த ஒற்றுமையை பதவி பட்டங்களால் பிரித்து விடாது சகலரையும் கட்டிகாப்பத்த தமிழ்,முஸ்லிம் அரசியல் கட்சிகளையும் ,அதன் தலைமைகளையும் அன்புடன் வேண்டி கொள்கிறேன். அத்துடன் சகல முஸ்லிம்,தமிழ் மக்களும் இந்த ஒரு பதவியை மையமாக வைத்து இன,மத,பிரதேச வாததங்களால் பிரிந்து விடாமல் ஒற்றுமையாக வாழ வேண்டும் எனவும் வேண்டி கொள்கிறேன்.என தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சியின் தேசிய கொள்கை பரப்பு செயலாளரும் அல்-மீசான் அறக்கட்டளை தலைவருமான தேசமான்ய அல்-ஹாஜ் நூருல் ஹுதா (j.p)எமது ஊடகத்திற்கு தெரிவித்தார்

Post a Comment

0 Comments