-நஜீப் பின் கபூர்-
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிளைளை பிரபாகரனின் கதையை 2009 மே 19ம் திகதி முள்ளிவாய்க்காலுக்குள் முடக்கிப்போட்ட வேளை, இந்த வெற்றியின் சொந்தக்காரனாக சிங்கள மக்கள் முன்னாள் ஜனாதிபதியை பார்த்தனர். அல்லது பார்க்க வைக்கப்பட்டனர். அவரே ஆயுல் பூராவும் இந்த நாட்டில் தலைவராகவும் இருக்க வேண்டும் என்றும் கருதினர். பலர் ராஜபக்ஷவை ஒரு மன்னாகவும் பார்த்தனர்-நினைவு கூர்ந்தனர். இந்தளவு விரையில் ராஜபக்ஷவை இதே மக்கள் வீழ்த்துவார்கள் என்று எவரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். இப்படி எதிர்பார்க்கப்பட்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தத் தேர்தலில் ஏன் தோற்றுப்போனார் என்ற விடயத்தை நாம் மூன்று தலைப்புக்களில் இங்கு வரிசைப்படுத்தி ஆராயலாம் என்று கருதுகின்றோம். அத்துடன் ஒவ்வொரு விவகாரத்தையும் பத்து அம்சங்களுக்குள் மட்டுப்படுத்தி எமது ஆய்வை வாசகர்களுக்கு வழங்குகின்றோம். இந்த எமது மதிப்பீடு தொடர்பாகவும், இந்த வரிசைப்படுத்தல் ஒழுங்குகள் மீதும் முறன்பாடுகள் சிலருக்கு ஏற்படவும், இல்லை இந்தப் பட்டியலில் இந்த விடயங்களும் உள்வாங்கப் பட்டிருக்க வேண்டும் என்ற கருத்துக்களும் இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். இது எமது பார்வையும் எமது கணிப்பு.
01.மஹிந்த ராஜபக்ஷவின் சர்வாதிகாரப் போக்கு
தமக்கு சவால் விடக்கூடிய அரசியல் எதிரிகள் யாரும் இந்த நாட்டில் கிடையாது என்ற நிலையில் ராஜபக்ஷ தம்மை ஒரு சர்வாதிகாரியாக தன்னைத்தானே உருவாக்கிக் கொண்டர். எவரும் அவரிடத்தில் எந்தக் கேள்விகளையும் கேட்க முடியாது. அரசியல் அதிகாரங்களையும் கட்சி அதிகாரங்களையும் அவர் தனக்கு ஏற்றவாறு யாப்புத் திருத்தங்களைச் செய்து மாற்றி அமைத்துக் கொண்டார். நாமல் ராஜபக்ஷவுக்கு பட்டன் வயதுள்ள மூத்த அரசியல்வாதிகள் அமைச்சர்கள் கூட அவருக்கு சேர் பேட்டுப் பேசும் அளவுக்கு ராஜபக்ஷக்களிடத்தில் அரசியல்வாதிகளே நடுங்கிக் கொண்டிருந்தார்கள். இதற்கு நல்லதொரு உதாரணம் நான் ராஜபக்ஷவின் கரங்களினால் கண்ணத்தில் அடிவாங்கி இருக்கின்றேன் என்று அமைச்சர் மோவின் சில்வா கூறுவதுடன் என்னைப் போன்று அடிவாங்கியவர்கள் இன்னும் பலபேர் இருக்கின்றார்கள் என்றும் அவர் ஒப்பாறிவைத்துக் கொண்டிருக்கின்றார் சண்டியனாக இருந்த மேர்வின்.
02. ராஜபக்ஷக்களின் குடும்ப ஆதிக்கம்
அரசியல் அதிகாரங்கள் அனைத்தையும் ராஜபக்ஷக்கள் தமது பிடியில் வைத்திருந்தார்கள். அமைச்சுக்களுக்கு ஒதுக்கப்படுகின்ற நிதியில்யில் 60 சதவீதம் ராஜபக்ஷக்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. மேலும் அடுத்த அமைச்சுக்களையும் தமது கையாட்களை வைத்து ராஜபக்ஷக்கள் கட்டுப்படுத்திக் கொண்டிருந்தார்கள். ராஜபக்ஷ அரசில் எல்லோரும் அமைச்சர்களாகவும் பிரதி அமைச்சர்களாகவும் நியமிக்கப்பட்டிருந்த போது அந்த நியமனங்களும் அதிகாரங்களும் கடிதத்திற்கு பதவிக்கும் மட்டுமே மட்டுப்பட்டதாக இருந்தது. மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி, அண்ணன் சாமல் ராஜபக்ஷ சபாநாயகர், தம்பி பசில் பலம் வாய்ந்த அமைச்சர் மட்டுமல்லாமல் கட்சியில் தேசிய அமைப்பாளரும் கூட, அடுத்த சகோதரன் படைகளுக்குக் கட்டளையிடும் அதிகாரி. மகன் செல்வாக்கான பாராளுமன்ற உறுப்பினர் மட்டுமல்லமல் அவருக்கு பல்லாயிரம் பேர் கொண்ட நீலப் படையணி ஒன்று எப்போதும் பின்னால் இருந்தது. தேர்தலுக்குப் பின்னர்தான் முதலமைச்சர் தெரிவு ஆனால் ராஜபக்ஷ குடும்பத்தில் போட்டியிட்ட சசிந்திர ராஜபக்ஷ மட்டும் தேர்தலுக்கு முன்னரே முதல்வர் என்ற அறிவிப்பு, ராஜபக்ஷ குடும்ப ஆதிக்கம் எந்தளவு அட்டகாசமான அரசியலில் இருந்து வந்திருக்கின்றது என்பதற்கு நல்லதொரு உதாரணம்.
03. தூய்மையற்ற நிருவாக முறையும் மோசடிகளும்
தற்போது ஊடகங்களிலும் கொடுக்கப்படுகின்ற முறைப்பாடுகளிலும் தூய்மையற்ற நிருவாகம் எந்தளவுக்கு தலைவிரித்தாடி இருந்து இருக்கின்றது என்பதற்கு சான்றாக இருக்கின்றது. தனக்கு வேண்டியவர்களுக்கு அபிவிருத்தித் திட்டங்களுக்கு கொந்தரத்துக்கள் தாராளமாக சட்டவிதிகளுக்கு முறனாக வழங்கப்பட்டிருப்பது தொடர்பாக தற்போது குற்றப்புலனாய்வுத் துறையினருக்கு எண்ணிக்கையற்ற வகையில் முறைப்பாடுகள் கொடுக்கப்பட்டு அது தொடர்பாக தற்போது விசாரணைகள் முடக்கி விடப்பட்டிருக்கின்றது.
04. கட்சி மட்ட அதிர்ப்திகள்
இப்படியாக ராஜபக்ஷக்கள் அரசாங்கத்திலும் கட்சியிலும் மேற் கொள்கின்ற அடாவடித்தன நடவடிக்கைகள் தொடர்பாக குமுறுகின்ற எரிமலையின் நிலையில் கட்சிக்காரர்கள் இருந்திருக்கின்றனர். இந்தத் தேர்தலில் அவர்கள் ராஜபக்ஷக்களின் வெற்றிக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்குப் பதிலாக கலுத்தருப்பு வேலைகளை செய்து ராஜபக்ஷவைத் தோற்கடிக்கின்ற வேலையைப் பார்த்திருக்கின்றனர் என்பது தற்போது அவர்களின் வார்த்தைகளில் இருந்தே தெரிய வருகின்றது. தமக்கு சுதந்திரமாக கருத்துக்கள் தெரிவிக்கின்ற நிலை அன்று அரசாங்கத்திலோ கட்சியிலோ இருக்கவில்லை என்பது அவர்களது கருத்தாக இருக்கின்றது. பதவிகள் கொடுக்கப்பட்ட விடயத்திலும் இந்த முறன்பாடு இருந்து வந்தது.
05. சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள்
இந்தத் தேர்தலில் சிறுபான்மை சமூகத்தின் பாரிய அதிர்ப்தி ராஜபக்ஷக்களுக்கு இருந்து வந்தது. போரில் வெற்றி பெற்றலும் வடக்கு கிழக்கு மக்களின் அரசியல் பிரச்சனைகளுக்கு அரசு உருப்படியாக எதையும் செய்ய வில்லை. மாறாக குறைந்த பட்சம் ஜனநாயக ரீதியில் வெற்றி பெற்ற வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபைகளைக்கூட ராஜபக்ஷ நிருவாகவும் சுதந்திரமாக இயங்க இடம் கொடுக்காது அங்கு இராணுவ நிருவாகத்தை முன்னெடுக்க அரசு முனைகின்றது என்ற குற்றச்சாட்டை வடக்கு முதல்வர் விகி. மட்டுமல்ல கிழக்கு ஆளும் தரப்பு முதல் நஜீப் கூட பல தடவைகள் பகிரங்கமாகக் குற்றம் சாட்டி இருந்தார். அளுத்கமை பேருவளையில் நடந்த முஸ்லிம் சமூகத்தின் மீதான திட்டமிட்ட வன்முறையின் பின்னணியில் ராஜபக்ஷக்களின் கரங்கள் இருந்திருக்கின்றது என்று முஸ்லிம்கள் உறுதியாக கருதுகின்றனர். அன்று ஆளும் தரப்பு அமைச்சர்களாக இருந்த வாசு போன்றவர்களும் இது பற்றி கூறி இருந்தனர். இதனால் முஸ்லிம்கள் ராஜபக்ஷவுக்கு வாக்களிப்பதை முற்றாகவே நிராகரித்த நிலை இந்தத் தேர்தலில் காணப்பட்டது. கடந்த 2010 தேர்தலில் கனிசமான வாக்குகளை முஸ்லிம்கள் ராஜபக்ஷவுக்கு வழங்கி இருந்தனர். மேலும் இந்த நாட்டில் வாழ்கின்ற கிருஸ்தவ சமூகத்தினரும் ராஜபக்ஷவுக்கு வாக்களிக்கவில்லை என்பது கப்பஹ மாவட்ட தேர்தல் முடிகளில் பார்க்கக் கூடியதாக இருக்கின்றது.
06. செல்வாக்கில்லாத கட்சிகளின் கூட்டு
இந்தத் தேர்தலில் ராஜபக்ஷக்களின் கூட்டில் இருந்த கட்சிகளை நோக்கின்ற போது, சுதந்திரக் கட்சியின் முதுகில் ஏறி பாராளுமன்றம் வந்த விமல் வீரவன்ச, வாசு, மற்றும் தேசிய பட்டியல் மூலம் பாராளுமன்ற வந்த டியூ குனசேக்கர, திஸ்ஸ விதாரன போன்றவர்களின் கட்சிகளும் வடக்கில் மக்களால் நிராரிக்கப்பட்ட டக்லஸ் போன்றவர்களது கட்சிகளும் கடித் தலைப்புக்களை மட்டுமே வைத்திருக்கின்ற கட்சிகள் பலவுமே இந்த முறை ராஜபக்ஷ கூட்டில் இருந்தது. இவர்களுக்கு சில நூறு வாக்குகளையேனும் ராஜகபஷவுக்குத் தேர்தலில் பெற்றுக் கொடுக்க முடியாத கட்சிகளாக சில இருந்தன.
07. ஆளும் தரப்பு அரசியல்வாதிகளின் அடாவடித்தனங்கள்
மஹிந்த ராஜபக்ஷ அரசில் அடாவடித்தனங்களை மேற்கொண்ட அரசியல்வாதிகளுக்கு உரிய விதத்தில் தண்டனை வழங்குவதற்கு நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படவில்லை. முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா, முதுஹெட்டி, சச்சின் வாஸ், அம்பாந்தோட்டை நகராதிபதி விராஜ், போன்றவர்களின் நடடிவக்கைகளும் ராஜபக்ஷ மீது மக்கள் வெறுப்படையக் காரணமாக இருந்தது.
08. ஊடகங்களுக்கு எதிரான அடக்கு முறை
ராஜபக்ஷ அரசில் ஊடகங்கள் மீது மேற் கொள்ளப்பட்ட கொலைகள், ஆள் கடத்தல்கள் தாக்குதல்கள், தீ வைப்பு சம்பவங்கள் அச்சுறுத்தல்கள் போன்ற காரணங்களினால் ஊடகத்துறையினர் ராஜபக்ஷ நிருவக்த்தின் மீது வெறுப்புடனும் அச்ச உணர்வுடனும் செயலாற்றி வந்தனர் எனவே ஊடகவியலாளர்கள் இந்தத் தேர்தலில் நேரடியாகவும் மறைமுகமாகவும் ராஜபக்ஷவுக்கு ஒத்துழைப்பு வழங்கி இருக்க மாட்டார்கள் என்றுதான் தெரிகின்றது.
09. ஜேவிபி, ஹெல உறுமய ஆகியவற்றின் அதிரடி பரப்புரைகள்
மேற் சொன்ன அனைத்துக் காரணங்களும் ராஜபக்ஷவுக்கு எதிராக இருந்தாலும் ஜேவிபி , ஹெல உறுமய என்பன அமைப்பு ரீதியில் இந்;தத் தேர்தலில் ராஜபக்ஷவுக்கு எதிராக மேற் கொண்ட வெற்றிகரமான பரப்புரைகள் இந்தத் தேர்தலில் ஒரு தீர்க்கமான காரணியாக அமைந்திருந்தது. இந்த அமைப்புக்கள் மக்கள் மத்தியில் முன்னெடுத்துச் சென்ற கருத்துக்கள் வாக்காளர் மத்தியில் நியாயமான தாக்கங்களைச் செலுத்தி இருந்தது.
10. வெகுஜன இயக்கங்களின் எழுர்ச்சி
வரலாற்றில் என்றுமில்லாதவாறு ராஜபக்ஷக்களின் அடக்கு முறைகளுக்கு மத்தியிலும், இந்த முறை நாட்டின் நலன் கருதி அவரைத் தேற்கடித்தே ஆக வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அவை செயலாற்றிக் கொண்டிருந்தது. இதில் புரவெசி பெரமுன எனும் குடிகளின் முன்னணி என்ற அமைப்பு பாரிய பங்காற்றி இருக்கின்றது. இது தவிர இன்னும் பல சிவில் அமைப்புக்களும் இந்தப் போராட்டத்தில் துனிவுடன் ராஜபக்ஷவுக்கு எதிராக களமிறங்கி இருந்தன.
தோல்விக்கு வித்திட்ட 10 பிரபல்யங்கள்
இதுவரை ராஜபக்ஷ தேல்விக்கான காரணங்களைப் பார்த்தோம். இப்போது ராஜபக்ஷவை பதவியில் இருந்து இறக்குவதற்கு பங்களிப்புச் செய்த முக்கிய அரசியல் செயல்பாட்டாளர்களை நாம் வரிசைப்படுத்த முனைகின்றோம்.
01மாதுலுவாவே சோபித்த தேரர்
மாதுலுவாவே சோபித்த தேரரின் வரலாற்றைப் பற்றி அறிந்திருக்காத சிலர், ஒரு கட்டத்தில் அவர் ராஜபக்ஷவிடம் பணத்தை வாங்கிக் கொண்டு ஓரமாகி விட்டார் என்றும், இனியும் சோபித தேரரின் பேச்சை நம்பி எவரும் ஏமாற மாட்டர்கள் என்று ஊடகங்களில் கூட சிலர் குறிப்புக்களை எழுதி இருந்தார்கள். ஆனால் சோபித தேரர் ஒரு போராட்டக்காரர் மட்டுமல்ல எந்த அரசியல்வாதியாலும் பணங் கொடுத்து வாங்கக்கூடிய ஒரு மனிதராக அவர் என்று இருந்ததில்லை என்பதுதான் வரலாறு. இந்த சோபித தேரர்தான் ராஜபக்ஷவை வீட்டுக்கு அனுப்பி வைக்கின்ற போராட்டத்தின் மூலகர்த்த என்பது இன்று நிரூபிக்கப்பட்டிருக்கின்றது. அவர் காய் நகர்த்தலின் படியே இந்தத் தலைவர்கள் காரியம் பார்த்து இந்த போராட்டத்தில் வெற்றியும் பெற்றிருக்கின்றார்கள். எனவே அரை நாங்கள் நம்பர் வன் என்று அடையலப் படுத்துகின்றோம்.
02. சந்திரிக பண்டாரநாயக்க குமாரணதுங்ஹ
சோபித்த தேரர் இப்படி காய்களை நகர்த்திக் கொண்டிருக்கின்ற நேரத்தில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக பண்டாரநாயக்க குமாரனதுங்ஹ மறுபுறத்தில் பொருத்தமான வேட்பாளராக இனம் கண்டிருந்தார். அத்துடன் ராஜபக்ஷவுடன் அதிர்ப்தியாளர்களையும் அவர் ஒன்று சேர்க்கின்ற பணிகளை மிகவும் இரகசியமாக மேற்கொண்டு வந்தார். சந்திரிக்க குமாரனதுங்ஹவிற்குக் கொடுக்கப்பட்ட பாதுகாப்புப் படையினர்களின் கண்களில் மண்ணைத் தூவி விட்டே இவர்கள் இந்தச் சந்திப்புக்களை அவ்வப்போது ஹெரகொலையில் மேற்கொண்டனர். சந்திரிகாவுக்கு பாதுகாப்புக்காகக் கொடுக்பட்டிருந்த படையினரில் பலபேர் ராஜபக்ஷவுக்காக உளவு பார்ப்பவர்கள் என்பது அவர்களுக்கு ஏற்கெனவே தெரிந்திருந்ததால் சந்திப்புகளை அவர்கள் மிகவும் லாவகமாக கடைசி நேரம் வரைமுன் னெடுத்து வந்தார்கள்.
03. ரணில் விக்கிரமசிங்ஹ
நான் தான் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளன் என்று ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் செய்த அறிவிப்பால் மஹிந்த ராஜபக்ஷ மிகவும் உற்சாகமாக இருந்ததுடன் இந்த முறையும் தேர்தலில் தனிக் குதிரை ஓட்டம் என்பது அவர் எதிர்பார்ப்பாக இருந்தது. சோபித தேரர் மற்றும் சந்திரிகா போன்றவர்கள் ராஜபக்ஷவுக்கு எதிரான போராட்டத்தில் ரணிலுக்குத் தாக்குப்பிடிக்க முடியாது என்பதை விளக்கியபோது அதனை ஏற்றுக் கொண்டு ரணில் செய்த விட்டுக் கொடுப்பு மஹிந்த ராஜபக்ஷ தோல்விக்கு முக்கிய காரணியாக அமைந்ததுடன் ஐக்கிய தேசியக் கட்சிக்காரர்களும் இந்த நிலைப்பாட்டடை ஏற்றுக் கொண்டனர். என்றாலும் திஸ்ஸ அத்தநாயக்க இந்த தீர்மானத்திற்கு எதிராக ராஜபக்ஷ சார்பில் கட்சியில் குழப்பங்களை ஏற்படுத்த முனைந்தார். இதனை நாம் திஸ்ஸ அத்நாயக்க கட்சி தாவலை மேற்கொள்வதற்கு பல வாரங்களுக்கு முன்னரே சொல்லி இருந்தோம்.
04. அணுரகுமார திசாநாயக
மேற் சொன்ன பௌத்த பிக்குவும் அரசியல் தலைவர்களும் ராஜபக்ஷவுக்கு எதிராக நடவடிக்கைகளில் இறங்கி இருந்த நேரத்தில் ஜேவிபிக்குப் பதிய தலைவராக தெரிவு செய்யப்பட்ட அணுரகுமார திசாநாயக கொடுத்த தலைமைத்துவம், ராஜபக்ஷக்களின் அரசியல் தொடர்பாக மக்களிடத்தில அவர் முன்வைத்த கருத்துக்கள் மேடைகளிலும் தொலைக் காட்சிகளிலும் அணுர தனது வாதங்களை முன்னெடுத்துச் சென்ற அனுகுமுறைகள் மக்களிடத்தில் பாரிய வரவேற்பை பெற்றது. இதனால் ராஜபக்ஷவின் இமேஜை நியாயமாக பழுதுபட்டது. அந்த வகையில் அணுரகுமார திசாநாயக ராஜபக்ஷக்களுக்கு எதிரான மக்களை ஒரு முகப்படுத்துகின்ற விடயத்தில் பாரிய பங்களிப்பை வழங்கி இருந்தார்.
05. அதுருலியே ரதன தேரர்
சிறுபான்மை சமூகத்தினர் மத்தியில் ஒரு இனவாதியாகப் பார்க்கப்பட்ட ஹெல உறுமயவின் முக்கிய தலைவரான அதுருலியே ரத்தன தேரர் ராஜபக்ஷ கூட்டிலிருந்து வெளியேறி ராஜபக்ஷவின் அட்டகாசங்கள் தொடர்பாக மக்களிடத்தில் குறிப்பாக பௌத்த மக்களிடத்தில் முன்னெடுத்தச் சென்ற துனிச்சலான கருத்துக்கள் ராஜபக்ஷவுக்கு பௌத்த மக்களிடத்தில் இருந்துவந்த செல்வாக்கை மேலும் பாதிப்படையச் செய்து விட்டது. பொதுபல சேன, ராவண பலகாய போன்ற அமைப்புக்கள் ராஜபக்ஷ சார்பில் ஆஜரானாலும் அதுருலியேவின் வாதங்கள் முன்னே அவை செல்லாக் காசாகி விட்டது. கட்டுரையாளனின் கருத்துப்படி அதுருலியே போன்றவர்கள் ராஜபக்ஷ சார்பாக களத்தில் நின்றிருந்தால் தேர்தலில் சிறிய வாக்கு வித்தியாசத்திலேனும் ராஜபக்ஷ வெற்றி பெற்றிருப்பார். அந்தவகையில் பௌத்த மக்களிடத்தில் அதுருலியே, சம்பிக்க போன்றவர்களின் கருத்துக்கள் இந்தத் தேர்தலில் ஆதிக்கம் செலுத்தி இருக்கின்றது.
06. ராஜித சேனாரத்ன
2015 ஜனாதிபதித் தேர்தலில் ராஜித சேனாரத்ன எடுத்துக் கொண்ட பங்களிப்பு தீர்க்கமானதும் தனிப்பட்ட ரீதியில் ஆபத்து மிக்கதாகவும் இருந்தது. என்றாலும் இந்தத் தேர்தலில் தமது அணிக்கு வெற்றி நிச்சயம் என்ற நிலைப்பாட்டில் துவக்கத்திலிருந்தே அவர் உறுதியாக இருந்தார். வாக்குறுதியளித்த படி தனது சகாக்கள் உரிய நேரத்தில் தமது அணியுடன் வந்து இணைந்து கொள்ளாவிட்டாலும் உளவியல் ரீதியில் ராஜபக்ஷ அணிக்கு பாரிய நெருக்கடிகளை ராஜித கொடுத்துக் கொண்டிருந்தார். அந்த வகையில் இந்த மக்கள் புரட்சியில் வரலாற்றில் ராஜித சேனாரத்னாவின் பங்களிப்பு பதியப்பட வேண்டியிருக்கின்றது.
07. கோட்டாவின் கொடூர நடவடிக்கைகள்
இதுவரை நாம் 2015 தேர்தலில் மைத்திரியை ஜனாதிபதியாகி இந்த நாட்டில் ஜனநாயகம் பாதுகாக்கக் காரணமானவர்கள் பற்றிப் பார்த்தோம் இப்போது. ராஜபக்ஷவின் முகாமிலிருந்து சிலர் பார்த்த நடவடிக்கைகளினால் ராஜபக்ஷவுக்கு மக்களிடத்தில் இருந்த நல்லபிப்பிராயம் இல்லாமல் போனமைக்கு காரணமாக இருந்தவர்களின் வரிசையில் மஹிந்த ராஜபக்ஷவின் படைகளுக்குப் பொறுப்பான தம்பி கோட்டா முக்கியமானவராக இருந்தார். சட்டத்திற்கு முறனான கடும்போக்கு நடவடிக்கைகள் மற்றும் இனவாதக் குழுக்களுக்கு ஒத்துழைப்பு வழங்கி சிறுபான்மையினருக்கு அச்சுறுத்தல்களை கொடுக்கக் காரணமானவர் என்றவகையில் ராஜபக்ஷவின் தோல்விக்கு முக்கிய பங்காளியாக நாம் அவரை அடையாளப்படுத்த முடியும்.
08. கலபொடஅத்த ஞானசார தேரர் வன்முறைகள்
நூம் முன்பு சொன்ன கோட்டாபே ராஜபக்ஷவின் அடியாளாக நின்ற பௌத்த வாதத்தைக் கிளப்பி இந்தத் தேர்தலில் ராஜபக்ஷவை ஜனாதிபதியாக மீண்டும் கொண்டுவந்து நிறுத்தலாம் என்று வேலை பார்த்தவர்களில் பொதுபல சேனா அமைப்பின் கலபொட அத்த ஞானசாரத் தேரர் முக்கியம் பெறுகின்றார். எமது கணிப்பின்படி சுமார் பத்து இலட்சம் சிறுபான்மை சமூகத்தின் வாக்குகள் ராஜபக்ஷவுக்கு இந்தத் தேர்தலில் இல்லாமல் போனதற்கு இவர் நேரடிக் காரணி. ஒரு கட்டத்தில் இவர் தன்னிடம் 50 இலட்சம் பௌத்த வாக்குகள் இருப்பதாகவும் ஊடகங்கள் முன்பேசி இருந்தார்.
09. விமல் வீரவன்சவின் நையாண்டி பேச்சுக்கள்
முன்னாள் ஜேவிபி செயல்பாட்டுக்காரராகவும் பிற்காலத்தில் புதிய கட்சி சமைத்து சுதந்திரக் கட்சி வாக்குகளினால் பாராளுமன்றத்தில் வந்து ராஜபக்ஷாக்களின் மிக முக்கிய விசுவாசியாக இவர் தன்னைக் காட்டிக் கொண்டதால் சுதந்திரக் கட்சி முக்கியஸ்தர்கள் மத்தியில் அதிர்ப்தி நிலை மேலோங்கி இருந்தது. மறு புறத்தில் தேர்தல் மேடைகளில் இவர் உச்சரித்த வார்த்தை பிரயோகங்கள் - மைத்திரி தொடர்பான நையாண்டிகள் பேச்சுக்கள் சுதந்திரக் கட்சிக்காரர்கள் பல்லாயிரக் கணக்கில் மைத்திரிக்கு ஆதரவு வழங்கக் காரணமாக அமைந்தது.
10. எஸ்.பி.திசாநாயக்க தூசன வார்த்தைகள்
வார்த்தைகளைத் தப்பாகப் பேசியதால் சிறையில் கூட தனது காலத்தைக் கழித்து அப்போது ராஜபக்ஷவின் கொடூரங்கள் பற்றி புத்தகங்கள் 10 க்கூட எழுதியவர் நமது முன்னாள் உயர் கல்வியாளர். இந்தத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி சந்திகாவை நிர்வாணமாக்கி அவரை பைத்தியக்காரிபோல் வீதிகளில் தூரத்திக் கொண்டு செல்ல வேண்டும் என்று பேசிய கொடூரமான வார்த்தைகள். இத்தனைக்கும் இப்போது சந்திரிகாவின் வயது 70.சுதந்திரக் கட்சிக்காரர்கள் மத்தியில் எஸ்.பி.திசாநாயக்காவின் இந்த வார்த்தைகள் சுதந்திரக் கட்சிக்காரர்களின் உள்ளங்களில் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தியது.
நாட்டில் ஜனநாயகத்தைக் காக்க உதவிய 10 காரணிகள்
நாட்டில் ஜனநாயகத்தைக் காக்க உதவிய பத்துக் காரணங்கள் பற்றிய நிறையக் கூற தகவல்கள் எம்மிடம் இருந்தாலும் இந்த கட்டுரை மேலும் நீண்டு விடக் கூடாது என்பதனால் அவற்றை இங்கு நேரடியாகப் பட்டியல் படுத்தி வாசகர்களுக்கு கொடுக்கலாம் என்று எதிர்பார்க்கின்றோம்.
01. தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய துனிச்சலான செயல்பாடுகள்.
02. பொலிஸ் மா அதிபரும் பொலிசும் கடைப்பிடித்த நடு நிலை.
03. இராணுவப் படைத் தளபதியின் ஒத்துழைப்பு.
04. அமெரிக்காவின் அழுத்தங்கள்.
05. இந்தியவின் எச்சரிக்கை.
06. ஐ.நா.செயலாளரின் அவதானம்.
07. சிரச எதிரணிக்குக் கொடுத்த ஒத்துழைப்பு.
08. இணையத்தளங்களும் முகநூல்களும்.
09. அரச சார்பில்லாத தமிழ் ஊடகங்களின் நகர்வு.
10. அரச அதிகாரிகளின் நடு நிலையான செயல்பாடுகள்.


0 Comments