Subscribe Us

header ads

விகிதாசார தேர்தல் முறை ஒரு கண்ணோட்டம்.

Untitled
இலங்கையின் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறை.
கட்சிகளுக்கான உறுப்பினர் எண்ணிக்கைகளைத் தீர்மானித்தல்.
முதலில் கட்சிகள் பெற்ற வாக்குகள் எண்ணப்படும். அதிக வாக்குகளைப் பெற்றகட்சி அல்லது குழுவுக்குரிய போனஸாக அக்கட்சியிலிருந்து ஒரு உறுப்பினர்தெரிவு செய்யப்படுவார்.
உறுப்பினர்களை ஒதுக்குவதற்காகத் தகுதி பெறும் ஒரு கட்சியோ அல்லது குழுவோ குறைந்த பட்சம் மொத்த வாக்குகளில் இருபதில் ஒரு பகுதியையாவது (5%) பெற்றிருக்கவேண்டும். இவ்வாறு பெறாத கட்சிகளும், குழுக்களும் நீக்கப்படும்.
அளிக்கப்பட்ட மொத்த வாக்கு எண்ணிக்கையிலிருந்து தகுதி பெறாத கட்சிகளும்குழுக்களும் பெற்ற வாக்குகள் கழிக்கப்படும். மிகுதி, அத்தேர்தல்மாவட்டத்திலிருந்து தெரிவாகவுள்ள உறுப்பினர் எண்ணிக்கையிலிருந்து ஒன்றைக்குறைத்து வரும் எண்ணினால் பிரிக்க வரும் தொகை  , ஆரம்பச் சுற்றில் ஒரு உறுப்பினரைப் பெறுவதற்குத் தேவையான வாக்கு எண்ணிக்கையாகும். மேற்படி ஈவினால் தகுதிபெற்ற கட்சிகளும், குழுக்களும் பெற்ற வாக்குகளை வகுக்கும் போது கிடைக்கும் ஈவுகளுக்குச் சமனான எண்ணிக்கையில் முதற் சுற்றில் உறுப்பினர்கள் ஒதுக்கப்படுவார்கள்.
முதற் சுற்றின் பின்னர் இன்னும் ஒதுக்குவதற்கு இடங்கள் இருப்பின் முதற்சுற்றில் வகுக்கும்போது கிடைத்த மிச்சங்கள் கவனத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும். கூடுதலாக மிச்சம் கிடைத்த கட்சிக்கு மிகுதியாகவுள்ள இடங்களில் முதலாவது இடம் வழங்கப்படும். முற்றாக ஒதுக்கி முடியும் வரை ஏனைய இடங்களும் இவ்வாறே கூடிய மிச்சம் உள்ள கட்சிகளுக்கு வழங்கப்படும்.

எடுத்துக்காட்டு

ஒரு குறிப்பிட்ட தேர்தல் மாவட்டம் ஒன்றின் தேர்தலில் வாக்களிப்பு விபரங்கள் கற்பனையாகத் தரப்பட்டுள்ளன
Puttalam
Members -08
Total Polled
408,850
Party
Vote
Percentage %
Party A
190350
46.56
Party B
182800
44.71
Party C
22000
5.38
Party D
12000
2.94
Independent 1
1400
0.34
Independent 2
300
0.07
மேலே காணப்படும் தேர்தல் முடிவுகளின்படி கட்சி-A கூடிய வாக்குகள்பெற்றிருப்பதால் இத் தேர்தல் மாவட்டத்துக்குரிய போனஸ் இடம் கட்சி-A க்குவழங்கப்படும்.
கட்சி-D யும் இரண்டு சுயேச்சைக் குழுக்களும் 5% இலும் குறைந்த வாக்குகள் பெற்றிருப்பதால் அவை உறுப்பினரைப் பெறும் தகுதியை இழக்கின்றன.
கட்சி-D யும் இரண்டு சுயேச்சைக் குழுக்களும் பெற்ற வாக்குகள் மொத்த வாக்குகளிலிருந்து கழிக்கப்படும்.
408850 – (12000+1400+300) =395150 வாக்குகள்.
தெரிவு செய்யப்படவேண்டிய உறுப்பினர் எண்ணிக்கை = 8, ஒரு உறுப்பினர் ஏற்கெனவே கட்சி-A க்கு ஒதுக்கப்பட்டுவிட்டது. மிகுதி = 7. எனவே:
ஒரு உறுப்பினருக்குரிய வாக்குகள் 395150/7 = 56450
கட்சிகள் பெற்ற வாக்குகளை ஒரு உறுப்பினருக்குரிய வாக்கினால் வகுக்க:
Party

Seats
Balance
Party A
190350/56450
3
21000
Party B
182800/56450
3
13450
Party C
22000/56450

22000
இப்பொழுது கட்சி நிலைவரம்:
Party
Bonus
Round
Total


1
2

Party A
1
3
-
4
Party B

3
-
3
Party C

0
-

மொத்தம் 7 உறுப்பினருக்குரிய இடங்கள் நிரப்பப்பட்டுவிட்டன. இன்னும் 1உறுப்பினருக்குரிய இடங்கள் நிரப்பப்பட வேண்டியுள்ளன. இனி ஒவ்வொருகட்சிக்கும் மிச்சமாக உள்ள வாக்குகளைப் பார்க்கவேண்டும். கட்சி-C ஆகக்கூடியமிச்சமாக 22,000 வாக்குகளை  கொண்டுள்ளது. இதனால் கட்சி-C ஒரு உறுப்பினர் கிடைக்கும்.
முடிவில் கட்சி நிலைவரம்:
Party
Bonus
Round
Total


1
2

Party A
1
3
-
4
Party B

3
-
3
Party C

0
1
1
A.H.Ihshan Mohamed
Puttalam

Post a Comment

0 Comments