R.M. நிஹால். நாஹூர் பள்ளி வீதியைச் சேர்ந்த சகோதரர் ரமீஸ் கானின் மகன். எனது மனைவியிடம் முன்பள்ளி மாணவனாக படித்த காலம் முதல் அறிவேன். ஒற்றை வரியில் கூறுவதாயின் ‘கெட்டிக்காரன்’.
பு/ புனித அன்றூஸ் கல்லூரியின் பழைய மாணவன். பாடசாலைப் பருவம் முதல் தனது மாமா (தாயின் சகோதரன்) ஏ.எஸ்.எம். ரிழ்வானுடன் சேர்ந்து உதவியாளனாக மின்சாரத் தொழிநுட்பத்தின் முன்பள்ளிப் பாடங்களைப் பயின்றான். கல்லூரி வாழ்க்கை நிறைவு செய்யும்போது, தொழில் ரீதியாக மின்சாரத் தொழில்நுட்பவியலில் முன்னெற வேண்டும் என்ற ஆர்வமும் உற்சாகமும் துளிர்விடுகின்றது. எந்தத் தொழிலாயினும் அதனை முறைப்படி கற்குமாறு மாமாவின் வழிகாட்டல் கிடைக்கின்றது.
தொழில் பயிற்சி அதிகாரச் சபை (Vocational Training Authority [VTA])-ன் கீழ் இயங்கும் நாகவில்லு தொழில் பயிற்சிக் கல்லூரியில் ‘மின்சார தொழில்நுட்பவியலாளன்’ (Electrician) 06 மாத டிப்ளோமா பயில்நெறியை (2013.01.15 முதல் 2013.07.15) வரை கற்று ஆரம்பத் தேர்ச்சியைப்பெற்றான்.
அதனைத் தொடர்ந்து, இ.தொ.ப.அ.சபையின் மாவட்ட அலுவலகத்தில் (மாதம்பை) 4 மாத மேலதிக தொழில் பயிற்சிக்கான போட்டிப் பரீட்சையில் சிறந்த புள்ளிகளைப் பெற்று, அச் சிறப்புப் பயிற்சியையும் பெற்றுக்கொண்டான்.
டொன் பொஸ்கோ தொழில் பயிற்சிக் கல்லூரியினால் வழங்கப்பட்ட ‘புதிய தொழில் முயற்சியாளர்களுக்கான தொழிலுரிமைத்துவ அபிவிருத்தி பயிற்சி’ 2 வார சிறப்புப் பயில்நெறியில் கலந்துகொண்டான். மர்ஹூம் ஏ.எச்.எம். அனஸ்தீன் அவர்களின் ஏ.என். இலக்றிகல் வர்க்ஸ் நிறுவனத்தில் இணைந்து (அன்னாரது மறைவு வரை) கடமையாற்றினான்.
தற்போது, சுய தொழில் முயற்சியாளனாக தன்னை வளர்த்து வருகின்றான். On Call Electrician (அழைத்தவுடன் சேவை வழங்கும் மின்சார தொழில்நுட்பவியலாளன்) என்ற சிறப்புச் சேவை வழங்கும் பொறிமுறையொன்றை அறிமுகப்படுத்துகின்றான்.
உங்கள் வீடு, வியாபார நிலையம், தொழில்சாலை போன்றவற்றில் 1 பேஸ் (Single phase) அல்லது 3 பேஸ் (3 phase) மின்சாரம் தொடர்பான தேவைகளுக்கும் நீர்க் குழாய் திருத்தம் (Plumbing) வேலைகளுக்கும் உங்கள் அழைப்பை எதிர்பார்த்து நிற்கின்றான்.
உங்கள் அழைப்புக்கு 075 537 9281
நன்றி Hisham Hussain
0 Comments