அரசியல் என்பது கடுமையான ஒழுக்க மான்புகளைக்கொண்ட செயற்பாடு என்பதை உண்மைப்படுத்தும் பொறுப்பு புதிய ஆட்சியாளர்களுக்கு மட்டுமன்றி ஜனநாயகத்தை விரும்பும் பிரஜைகளின் மீதும் சுமத்தப்பட்டுள்ளது. அதேநேரம், அரசியலை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய சமூக துரோகிகளுக்குக் கொடுக்க வேண்டிய பதிலடியைக்கொடுக்கும் கடமையும் இவ் இரு பிரிவினர் மீது உள்ளது.
இவை ஒருபோதும் ஜனநாயத்தை நலிவடையச் செய்வதல்ல, அதனை வலுவடையச் செய்வதாகும். இந்த யதார்த்தத்தை தினேஷ் குணவர்த்தன போன்ற மூத்த அரசியல்வாதிகள் அறியாதவர்கள் அல்லர். ஆனால் தூங்குவது போல் நடிப்பவனை என்ன செய்யலாம் ?
நாம் ஒரு விடயத்தை இச் சந்தர்ப்பத்தில் ராஜபக்ஷகளின் அல்லக்கைகளுக்குக் கூறிவைக்க விரும்புகின்றோம். போதுமான அளவு கூப்பாடு போடுங்கள். அது உங்கள் உரிமை. நீங்கள் அதிகாரத்தின் இரும்புச் சக்கரங்களைச் சுழற்றிய காலப் பகுதியில் எமக்கு இச் சந்தர்ப்பம் ஒருபோதும் இருக்கவில்லை. எமக்கு இல்லாமலிருந்த ஒன்று உங்களுக்குக் கிடைத்துள்ளது. அதனை முழுமையாகப் பயன்படுத்துங்கள்.
நீங்கள் நீங்களாக நிர்வானமாகுவதைப் பார்ப்பதற்கு முழு நாடும் காத்திருக்கின்றது. நீங்கள் எம்மை நோக்கி சுட்டு விரலை நீட்டும்போது மற்ற நான்கு விரல்களும் உம்மை நோக்கி நீளுவதை நீங்கள் அறியாதவர்கள் என்றால், அது எமது பிரச்சினை அல்ல உங்கள் மூளையின் கோளாறு என்பதை கூறிவைக்க வேண்டியுள்ளது.
நுவன் உதய விக்கிரமசிங்க (ராவய 2015.02.08)


0 Comments