முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்ச, கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டிய முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.
கடவுச்சீட்டு மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருக்கும் இவர், சிறைச்சாலை வைத்தியசாலையிலிருந்து சிறைச்சாலை வாகனத்தில் கொண்டுவரப்பட்ட அவரை, தள்ளுவண்டியில் படுத்திருந்தவாறே நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியுள்ளனர்.
இதேவேளை, பொலிஸ் பாதுகாப்போடு மாலபே தனியார் வைத்தியசாலையில் நேற்று சிகிச்சை பெற அனுமதிக்கப்பட்டபோது, அவரை நலம் விசாரிப்பதற்காக, முன்னாள் ஜனாதிபதியின் புதல்வரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ அங்கு விஜயம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 Comments