Subscribe Us

பெக்கருக்கு அதிர்ச்சி கொடுத்த மைத்திரி அரசு: திருப்தியற்றவர் பட்டியலில் இணைவு


உலக கசினோ மன்னர் என வர்ணிக்கப்படும் அவுஸ்திரேலியாவை சேர்ந்த ஜேம்ஸ் பெக்கர், இலங்கையில் திருப்தியற்றவர்களின் பெயர்களை கொண்ட பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஜேம்ஸ் பெக்கர் இலங்கையின் வர்த்தக துறையின் நம்பிக்கையை பழுதடைய செய்துள்ளதாக வர்த்தக துறையின் உயர்மட்ட தரப்புகள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் கசினோ விளையாட்டை பரப்ப முயற்சித்தமை இதற்கான காரணம் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் புதிதாக பதவியேற்ற ஜனாதிபதி மைத்திரி தலைமையிலான அரசாங்கம், கசினோ விளையாட்டுக்கு முட்டுக்கட்டையை ஏற்படுத்தியிருந்தது.

இதனையடுத்து ஜேம்ஸ் பெக்கர் இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட வர்த்தக முயற்சிகளை கைவிட்டு, நாட்டை விட்டு வெளியேறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments