தனது வீடு மற்றும் வீட்டுடன் உள்ள அரசியல் அலுவலகத்திற்கான மின்சாரக் கட்டணங்களைச் செலுத்தத் தவறிய வடமேல் மாகாண அமைச்சர் சனத் நிசாந்தவின் வீட்டுக்கான மின்சார இணைப்பைத் துண்டிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மின்சார சபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவர் தனது வீடு மற்றும் அலுவலகத்திற்கான மின்சாரக் கட்டணமாக சுமார் 14 இலட்சத்திற்கும் அதிகமான தொகையினைச் செலுத்தத் தவறியதாலேயே மின் துண்டிப்பை மேற்கொள்ள இலங்கை மின்சார சபை தீர்மானித்துள்ளது.
குறித்த அமைச்சரின் ஆராச்சிக்கட்டு பிரதேசத்தில் அமைந்துள்ள வீட்டின் மின்சார இணைப்பே இவ்வாறு துண்டிக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக இவரால் செலுத்தப்பட வேண்டிய மின்சாரக் கட்டணம், அதற்கான தாமதக் கட்டணம், மற்றும் தண்டம் என்பன அடங்கலாகவே அவரால் சுமார் 14 இலட்சத்திற்கும் அதிகமான தொகை செலுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இவர் முன்னைய வடமேல் மாகாண சபையில் மின்சக்தி எரிபொருள் துறை அமைச்சராகப் பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது.


0 Comments