பி. முஹாஜிரீன்
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 67 வது சுதந்திர தினத்தையொட்டி பாலமுனை அல் அறபா விளையாட்டுக் கழகத்தினால் மர நடுகை நிகழ்வொன்று இன்று (04) புதன்கிழமை நடைபெற்றது.
அல் அறபா விளையாட்டுக் கழகத்தின் தலைவர் எஸ். ஆப்தீன் தலைமையில் நடைபெற்ற இம்மர நடுகை நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் எம்.ஏ. அன்சில் பிரதம அதிதியாகவும், அட்டாளைச்சேனை பிரதேச விளையாட்டு உத்தியோகத்தர் எஸ்.எல். தாஜூதீன் சிறப்பு அதிதயாகவும் கலந்து கொண்டு தேசிய கொடியினை ஏற்றி வைத்த மர நடுகை நிகழ்வினை ஆரம்பித்து வைத்தனர்.
பாலமுனை கடற்கரை வீதியின் மருங்கில் தெரிவு செய்யப்பட்ட முக்கிய இடங்களில் மரங்கள் நடப்பட்டன. இந்நிகழ்வில் அல் அறபா விளையாட்டுக் கழகத்தின் நிருவாகிகள் உள்ளிட்ட கழகத்தின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.





0 Comments