முன்னாள் வர்த்தக அமைச்சரான ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ மதுவரித் திணைக்களத்திற்கு 800 மில்லியன் ரூபாய் வரி செலுத்தாமல் இருந்த தகவல் தற்பொழுது வெளிவந்துள்ளது.
ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ தனது சொந்த மது உற்பத்தி நிலையமான வயம்பே வடிகால் மது உற்பத்தி தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் மதுவிற்கான வரியையே செலுத்தாமல் இருந்துள்ளார்.
மதுவரித் திணைக்களத்தின் ஊடாக செலுத்தாவிட்டால் உடனடியாக அந்த மது உற்பத்தி தொழிற்சாலை மூடப்படல் வேண்டும் என்பது சட்டம். ஆனால் இச்சட்டத்தை மீறி அமைச்சர் தனது பதவியை துஸ்பிரயோகம் செய்து 7 மாதங்கள் வரி செலுத்தாமல் மது உற்பத்தி செய்து வந்திருக்கின்றார்.
அதேவேளை இவர் உற்பத்தி செய்த மதுபானங்கள் சதொச, கார்கில்ஸ் உள்ளிட்ட முக்கிய விற்பனை மையங்கள் மூலமாகவும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இது சட்டத்திற்கு முரணான செயலாகும். இவரின் தொழிற்சாலையின் உற்பத்தியே தெமட்டகொடயில் பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட 68 ஆயிரம் சாராய போத்தல் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.


0 Comments