உலகக்கிண்ண பயிற்சிப் போட்டியில் பலம் பொருந்திய இலங்கை அணியை ஜிம்பாப்வே 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
நியுசிலாந்தில் நடைபெற்ற இந்த பயிற்சி போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 279 ஓட்டங்களை குவித்தது.
துடுப்பாட்டத்தில் கருணாரத்ன 58 ஓட்டங்களையும், ஜீவன் மென்டிஸ் 51 ஓட்டங்களையும் எடுத்தனர். மேலும் இவர்களைத் தவிர, திரிமன்னே மற்றும் ஜெயவர்த்தனே ஆகியோர் தலா 30 ஓட்டங்களையும், தினேஸ் சந்திமால் 29 ஓட்டங்களையும் குவித்தனர்.
பின்னர் 280 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஜிம்பாப்வே அணி 45.2 ஓவர்களிலே 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து இலக்கை எட்டி இலங்கை அணிக்கு அதிர்ச்சியளித்தது.
ஜிம்பாப்வே அணி சார்பில் துடுப்பாட்டத்தில் மசகட்சா சதம் விளாசினார். இவர் 117 ஓட்டங்களையும், டெய்லர் 63 ஒட்டங்களையும், வில்லியம்சன் ஆட்டமிக்காது 51 ஓட்டங்களையும் பெற்றனர்.


0 Comments