இலங்கையிலிருந்து டுபாய் ஊடாக கட்டார் நாட்டிற்கு வெளிநாட்டு
நாணயத்தாள்களை கொண்டு செல்ல முயன்ற நபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில்
வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபரிடமிருந்து 4 கோடியே 83 இலட்சத்து 9 ஆயிரத்து 692 ரூபாவினை விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
கொழும்பு – மட்டக்குளி பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய நபரே சம்பவத்தில் கைது செய்யப்பட்டவராவார்.
பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


0 Comments