Subscribe Us

மியன்மாரில் கைதான இலங்கை மீனவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம்


மியன்மாரில் கைது செய்யப்பட்ட இலங்கையர்களை விடுவிக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக மீன்பிடி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

தூதரகங்கள் ஊடாக குறித்த மீனவர்களை விடுவிக்கும் வேலைகளை துரிதகதியில் மேற்கொள்ளுமாறு உள்நாட்டளுவல்கள் மற்றும் மீன்பிடி அமைச்சர் ஜோசப் மைக்கல் பெரேரா, அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

திருகோணமலை மற்றும் குடாவெல்ல பகுதியில் இருந்து சென்ற 17 மீனவர்கள் இவ்வாறு கடல் எல்லையை மீறிய குற்றச்சாட்டில், கடந்த ஒக்டோபர் 6ம் திகதி கைதுசெய்யப்பட்டனர்.

குறித்த மீனவர்களின் குடும்பங்கள் இன்று மீன்பிடி அமைச்சிற்கு சென்றிருந்தனர்.

இதன்போது அமைச்சர் ஜோசப் மைக்கல் பெரேரா, குறித்த குடும்பங்களை பராமரிக்க மாதாந்த நிவாரணத்தை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சின் செயலாளருக்கு கூறினார்.

Post a Comment

0 Comments