பசில் மற்றும் கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிராக குற்றவியல் விசாரணைப் பிரிவில் முறைப்பாட்டைப் பதிவு செய்து பரபரப்பை உருவாக்கிய முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிராகவும் ஊழல் மோசடி முறைப்பாடொன்றை பதிவு செய்யவுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் மேல் மாகாண சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர் சிசிர ஜயகொடி.
கட்சியின் களனி அமைப்பாளராக 2007ம் ஆண்டு நியமிக்கப்பட்டதன் பின்னர் இடம்பெற்ற நிதி சேகரிப்பின் மூலம் பெறப்பட்ட பணத்தைத் தனிப்பட்ட ரீதியாக பாவித்து மோசடி செய்ததாகவே அவர் மீது குற்றஞ்சுமத்தவுள்ளதாகவும் இவ்வாறு இரு தடவைகள் .இடம்பெற்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தான் எவ்விதமான குற்றச்சாட்டுக்களுக்கும் முகங்கொடுக்கத் தயார் என மேர்வின் சில்வா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


0 Comments