ஆட்சி மாற்றத்தினை தொடர்ந்து உள்ளூர் வர்த்தகர் அலி சப்ரியினால் பிற இடங்களிலிருந்து கொண்டுவந்து அத்துமீறி அமர்த்தப்பட்ட நடைபாதை வியாபாரிகளுக்கு எதிராக நகர பிதா கே.ஏ. பாயிஸ் அவர்கள் எடுத்திருக்கும் நடவடிக்கையின் முதற்கட்டமாக எச்சரிக்கை கடிதங்கள் இன்று (05.02.2015) நகர சபை உத்தியோகத்தர்களால் விநியோகிக்கப்பட்டன.
ஏற்கனவே வெளியூர் நடைபாதை வியாபாரிகளினால் புத்தளம் நகரம் ஆக்கிரமிக்கப்பட்திருந்ததும ், அதை அப்புறப்படுத்த பொலிசாரும், நகர சபையும், வீதி அபிவிருத்தி அதிகாரசபையும் கடும் பிரயத்தனங்ககளை மேற்கொண்டும் முடியாமல் போனபோது, மீண்டும் நகர பிதா கே.ஏ. பாயிஸ் அவர்கள் 2011 ஆம் ஆண்டு நகர சபையை கையேற்று பாரிய சவால்களுக்கு மத்தியில் 2012 ஆம் ஆண்டு மக்களுக்கு இடையூறாக இருந்த பெட்டிக்கடைகளை அப்புறப்படுத்தினார். புத்தளம் நகர சபையும், பொலிசாரும், வீதி அபிவிருத்தி அதிகார சபையும் இணைந்து மேற்கொண்ட இந்நடவடிக்கையினால் புத்தளம் நகரம் இன்று வடமேல் மாகாணத்தின் முதற்தர பவித்ர நகராக திகழ்ந்து வருகின்றது.
இவ்வாறு புத்தளம் நகர சபையும், பொலிசாரும், வீதி அபிவிருத்தி அதிகார சபையும் இணைந்து புத்தளம் நகரை வடமேல் மாகாணத்தின் முதற்தர பவித்ர நகராக பேணி வருகின்ற போது வர்த்தகர் அலி சப்ரி போன்றோரினால் மீண்டும் பழைய நிலைமைக்கு புத்தளம் நகரை கொண்டுசெல்ல எடுக்கப்படும் நடவடிக்கைகளை நகரசபை கண்டிக்கிறது. பெட்டிக்கடை வியாபாரிகளுக்கென புறம்பான இடம் வழங்கப்பட்டும் மீண்டும் மீண்டும் இவர்கள் பாதைகளையே ஆக்கிரமிக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நன்றி: புத்தளம் நகர சபை முகநூல் பக்கம்




0 Comments