முன்னாள் ஜனாதிபதியின் மகிந்த ராஜபக்சவின் புதல்வரும் கடற்படை அதிகாரியுமான யோஷித்த ராஜபக்ச, முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு அணியில் இணைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு அணியில் தன்னை இணைக்குமாறு யோஷித்த ராஜபக்ச இதற்கு முன்னர் கோரிக்கை விடுத்திருந்தார்.
யோஷித்த ராஜபக்ச கடற்டையில் இணைந்தமை மற்றும் பதவி உயர்வு வழங்கப்பட்ட விதம் குறித்து விசாரணை நடத்துமாறு ஜே.வி.பி பாதுகாப்பு செயலாளரிடம் முறைப்பாடு செய்துள்ளது.
இது சம்பந்தமாக விசாரணையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


0 Comments