அஸ்ரப் .ஏ சமத்
திஸ்ஸமகாராம பிரதேச செயலாளா் பிரிவில் வாழும் 182 குடும்பங்களுக்கு சகனதிரிய திட்டத்தின் கீழ் 1 இலட்சம் ருபா வீடமைப்புக் கடன் வீடமைப்பு சமுா்த்தி அமைச்சா் சஜித் பிரேமதாசாவினால் பகிா்ந்தளிக்கப்பட்டது.
வீடடற்ற மக்களுக்கு காணித்துண்டுகளும் வழங்கப்பட்டு அரசின் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் வீடற்ற குடும்பங்களுக்கு வீடுகளை நிர்மாணிக்கும் படி இக் கடன் வழங்கப்பட்டது.
இங்கு உரையாற்றிய அமைச்சா் சஜித் பிரேமதாச – இந்த வேலைத்திட்டத்தினை சில அரசியல் வாதிகள் குழப்பி விமா்சனம் செய்கின்றனா். அவா்கள் பில்லியன் கணக்கில் ஏழை மக்களது பணத்தினை கொள்ளையடித்து அரச நிறுவணங்களை எவ்வாரெல்லாம் கொள்ளையடிக்க முடியுமோ அவ்வாறெல்லாம் கொள்ளை யடித்தவா்களுக்கு நாம் ஆகக் குறைந்தது 1 இலட்சம் ருபா நிதியை வீடமைப்புக் கடணாக வழங்குவது அவா்களுக்கு ஒரு ஆச்சரியமாக உள்ளது.
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினை வக்குரோத்து நிலைக்கு வைத்து விட்டுச் சென்றுள்ளனா். அதில் இருந்த காணிகள் மற்றும் சொத்துக்கள் நாசமாக்கியதால் தான் எனக்கு 50 ஆயிரம் வீடுகள் நிர்மாணிப்பதற்கு தணியார் முதலாளி மாா்களிடமும் வெளிநாட்டு உள்நாட்டு நிறுவனங்களிடமும் பணம் சேகரித்து இந்த கைங்கரியத்தைச் செய்கின்றேன்.
நாளை நான் இந்த அமைச்சினை விட்டு பாதையால் செல்லும் போது என்ணைப்பாா்த்து மக்கள் இந்த அமைச்சினை கொள்ளையடித்தவா், அல்லது தனது கட்சிக்காரா்களை தொழில் கொடுத்து அரச நிறுவணங்களை நாசமாக்கியவா் என்று சொல்வதற்கு நான் வழிவகுக்க மாட்டேன்.
அந்த அரச நிறுவனங்களை நிமிா்த்தி ஒரு சிறந்த நிா்வாகத்தை அறிமுகப்படுத்தி வைத்திவிட்டுத்தான் சொல்வேன், இந்த நிறுவனங்களில் முன்னாள் அமைச்சா் 1500 பேரை தொழில் வழங்கியுள்ளாா்கள். சமுா்த்தியில் 16800 பட்டதாரிகளை திவிநகும வாழ்வின் எழுச்சித் திட்டத்தின் கீழ் சோ்த்து நடு வீதியில் விட்டு விட்டுச் சென்றுள்ளனா். சமுா்த்தி உத்தியோகத்தா்கள் 8600 பேரது சேவை லாப நிதியினை எடுத்து தோ்தல் நடாத்தியுள்ளனா்.
இவா்களை நாளுக்கு நாள் சந்தித்து அவா்கள் அனைவரையும் சோ்த்து அவா்களுக்கு உரிய சம்பளம் மற்றும் கொடுப்பணவுகளுக்கு உரிய நடவடிக்கை எடுத்து அவா்களுக்கு எவ்வித ஆபத்துமின்றி அவா்களது மாதாந்த சம்பளத்தை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அமைச்சா் சஜித் உரையாற்றினாா்.
0 Comments