Subscribe Us

header ads

நடைபெற்ற இலங்கை ஹஜ் பிரயாண முகவர்கள் சங்க வருடாந்த மாநாடு 2015 இன் விபரம்.

ஏ.எஸ்.எம்.ஜாவித்


இலங்கை ஹஜ் பிரயாண முகவர்கள் சங்கம் வருடாந்த மாநாடும் சங்கத்திற்கு அங்கத்தவர்களை சேர்க்கும் நிகழ்வும் கொழும்பு ரமடா ஹோட்டலில் இலங்கை ஹஜ் பிரயாண முகவர் சங்கத்தின் தலைவர் எம்.அஹம்மட் நிஜார் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை(21) நடைபெற்றது.

இதில் சங்கத்தின் புதிய நிருவாகிகள் மற்றும் ஹஜ் பிரயாண முகவர்கள் கலந்து கொண்டனர். இதன்போது சங்கத்தின் உருவாக்கம் மற்றும் அதன் செயற்பாhடுகள் குறித்து சங்கத்தின் தலைவர் விளக்கமளித்தார். இதன்போது சங்க அங்கத்தவர்களின் கருத்துக்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதுடன் எதிர்காலத்தில் இச்சங்கத்தை சிறப்பாக கொண்டு செல்வதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்குவதாக தெரிவித்தனர்.

சங்க நிருவாகிகளை தலைவர் முகவர்களுக்கு எடுத்துக் கூறினார். இதற்கமைய சங்க தலைவராக தான் இருப்பதாக எம்.அஹம்மட் நிஜார் தெரிவித்தார். ஏனையவர்கள் வருமாறு செயலாளர் எம்.ஓ.எப்.ஜெஸீம், உப தலைவர் எம்.ஆர்.எம்.பாரூக்கு, உப செயலாளர் எம்.ஜீ.எம்.இஷ்ஹாம் பொருளாளர் எம்.அவூன் அவூப் உப பொருளாளர் ஏ.சீ.பி.எம்.கரீம் நிர்வாக சபை அங்கத்தினர் எம்.ஏ.அமானுல்லா மற்றும் ஆலோசகர் சபை தலைவர் எம்.ஏ.காதர் ஆகியோர் நியமிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

சங்கத்தின் தலைவர் எம்.அஹம்மட் நிஜார் இங்கு மேலும் விளக்கமளிக்கையில் 1990ம் ஆண்டு மார்ச் மாதம் 19 ஆம் திகதி இச்சங்கம் ஆரம்பிக்கப்பட்டதாகவும் சில காலத்தின் பின்னர் வேறொரு சங்கம் உருவானதாகவும் அதில் பிரயாண முகவர்கள் அங்கத்;தவர்களாக சேர்;ந்தனர். இதற்கமைய தாங்களும் அதில் சேர்ந்து அங்கத்தவர்களா இருந்ததாக குறிப்பிட்டார்.

ஆனால் இச்சங்கத்தின் செயற்பாடுகளில் தமக்கு நம்பிக்கையில்லாததால் தற்போது அதிலிருந்து விலகி ஆரம்பத்தில் உருவாக்கப்பட்டு செயற்படாமலிருந்த சங்கத்தை செயற்படுத்துவதற்கு முன்வந்து இந்த மாநாட்டில் அங்கத்தவர்களை சேர்த்துக் கொண்டு ஹஜ் பிரயாண முகவர்களை சரியான முறையில் வழிநடத்தவதற்கு தீர்மானித்ததாக தெரிவிதார்.

முன்னைய சங்கத்தில் இருந்தபோது ஒழுக்கம் பின்பற்றப்படவில்லை முகவர்கள் மதிக்கப்படுவதில்லை.

முகவர்களின் பிரச்சினைகள் தேவைகள் சரியான முறையில் தீர்த்து வைக்கப்படவில்லை என்றார். அவர் முன்னைய சங்கத்தில் நடந்த பிழையான நடவடிக்கைகளை புதிய அங்கத்தவர்களுக்கு தெரிவித்தார். ஓரு சங்கத்தை அதன் தலைவர் சரியான முறையில் வழிநடாத்திச் செல்ல வேண்டும். ஆங்கத்தவர்களின் பிரச்சினைகள், தேவைகளை கேட்டறிந்து அதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் ஒருசிலர் ஒன்றிணைந்து நடவடிக்கைகள் மேற்கொள்வதால்தான் உறுப்பினர்கள் மத்தியில் பல்வேறு பிரச்சினைகளும் கேள்விகளும் எழுகின்றன.

குறிப்பாக புதிய சங்கத்தின் தலைவர் இரண்டு வருட காலம் மட்டுமே இருக்கலாம் அதன் பின் ஏனையவர்களும் தலைவர்களாகுவதற்கு இடமளிக்கின்றது. இச்சங்கத்தில் உறுப்பினராகுபவர்கள் தலைவருக்கு கட்டுப்பட்டவர்களாக இருக்க வேண்டும். புனிதமான சேவையை செய்;வதால் ஒழுக்கமான முறையில் நம்பிக்கைக்குரியவர்களாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இச்சங்கத்திற்கென்று யாப்பு உள்ளது. அங்கத்தவர்கள் விரும்பினால் யாப்பில் சேர்க்க வேண்டியவற்றை சேர்த்து நீக்கவேண்டியவற்றை நீக்க முடியும். இவை எமது சங்கத்தின் நலன் கருதியதேயாகும். குடந்த காலங்களில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டன.

பிரயாண முகவர்கள் நீதிமன்றம் என்றும் அமைச்சர்களை சந்திப்பது என்றும் ஏகப்பட்ட பிரச்சினைகள் வந்தன. இவைகள் தேவையற்ற ஒன்று. சரியான தலைமைய சரியான முறையில் அங்கத்தவர்களை வழிநடத்துவதன் மூலம் எந்தப் பிரச்சினைகளையும் இலேசான முறையில் தீர்;த்துவிடலாம்.

புதிய நிருவாகிகள் ஹஜ்ஜூக்கு பொறுப்பான அமைச்சரை சந்தித்து கலந்துரையாடினர். இச்சந்திப்பில் எங்களுடைய சகல விடயங்களையும் குறிப்பாக கடந்த கால செயற்பாடுகளினால் தாங்கள் பாதிக்கப்பட்டிருப்பது. ஏதிர்காலத்தில் பிரச்சினைகள் வராத வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் சம்பந்தமாக விரிவாக எடுத்துக் கூறினோம்.

அமைச்சர் சகலதையம் கேட்டாரே ஒழிய அவர் பதில் எதுவும் கூறவில்லை. தான் சவூதி அராபியாவுக்கு சென்று கோட்டாவை அதிகரித்து தருமாறு கேட்கவுள்ளதாகவும் அதன்பின் தங்களை அழைத்து மீண்டும் பேசுவதாகவும் கூறியதாக சங்கத் தலைவர் இங்கு தெரிவித்தார்.

அமைச்சரின் செயலாளரை வேறொருநாள் சந்தித்து கலந்துரையாடியதாகவும் அவர் ஹஜ் விடயங்களை நன்கு அறிந்துள்ளவராக இருந்தார் என்றும் நாங்கள் சொன்னவைகளுக்கு அவரே சில விடயங்களை எங்களுக்கு தெரிவித்தார்.

ஆனால் புதிய சங்கமானது பிரயாண முகவர்களை ஒற்றுமைப்படுத்தி அவர்களின் பிரச்சினைகளை தீர்த்து வைக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவித்தார்.

அதே சமயம் அமைச்சின் செயலாளர் சில் விடயங்களை தெரிவித்தார். எதிர்வரும் காலங்களில் ஒரு ஹாஜிக்காக 50 ஆயிரம் ரூபா வீதம் வைப்புச் செய்ய வேண்டும் என்றார். சுமார் 50 பேரை கொண்டு செல்வதாக இருந்தால் 25 இலட்சம் ரூபா வைப்புச் செய்யப்பட வேண்டும்.

இதற்கென விண்ணப்பப் படிவம் தருவதாகவும் அந்த விண்ணப்பப்படிவங்களை பூர்த்தி செய்து ஒப்படைக்க வேண்டும் என்றார். எனவே விண்ணப்பப் படிவம் சம்பந்தமாக பிரயான முகவர்கள் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்.

கடந்த காலங்களில் ஒரு விண்ணப்பப் படிவம் இரண்டாயிரம் ரூபாவாகும் இம்முறை அது நான்காயிரமாக அதிகரித்திருப்பதாகவும் செயலாளர் தெரிவித்ததாக கூறிய சங்க தலைவர் ஒவ்வொரு பிரயாண முகவர்களும் பத்து இலட்சம் ரூபா பிணை வைக்க வேண்டும் என்றும் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இவைகள் அனைத்தையும் நாங்கள் கேட்டு வந்துள்ளோம் இதனை முகவர்கள் ஏற்கிறார்களா அல்லது திருத்தம் செய்ய வேண்டுமா என நாம் கலந்து ஆலோசித்துவிட்டு எமது நிலையை அவர்களுக்கு தெரிவிப்போம்; என்றார். 

ஓவ்வொரு முகவர்களும் வங்கிக் கணக்கை வைத்திருக்க வேண்டும் இணையம் மூலமாக விண்ணப்பப் படிவத்தை பெற்று பூர்த்தி செய்ய வேண்டும்.

இது சவூதி அராபிய சென்று அனுமதி கிடைத்தபின்தான் முகவர்கள இக்கணக்கு மூலமாக பிரயாண விடயங்களை கவனிக்க முடியும். இவ்வாறாக கணக்கு இல்லாத முகவர்கள் ஹஜ்ஜாஜிகளை கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்படும் என சங்க தலைவர் தெரிவித்தார்.

இவ்வங்கிக்கணக்கு அந்தந்த ஹஜ் விடயங்களுடன் முடிவடைந்து விடும். அடுத்த முறை அந்த வங்கிக் கணக்கை செயற்படுத்த முடியாது.

இந்த விடயங்களை ஹஜ் பிரயாண முகவர்கள் நன்கு தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

Post a Comment

0 Comments