பதவியேற்ற பின் தனது முதலாவது
உத்தியோகபூர்வ விஜயத்தை அண்டை நாடான இந்தியாவுக்கு மேற்கொண்டு முக்கிய
உடன்படிக்கைகளையும் கைச்சாத்திட்டுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, அடுத்து
மார்ச் மாதம் இறுதியளவில் சீனா செல்லவுள்ளார்.
மார்ச், 26 சீனாவில் இடம்பெறவிருக்கும்
Boao Forum for Asia (BFA) மாநாட்டில் பங்கெடுப்பதற்காகவே அங்கு செல்லும்
ஜனாதிபதி அவ்வேளையில் சீன உயரதிகாரிகள் மற்றும் ஜனாதிபதியை சந்தித்து
பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடுவார் எனவும் இரு நாட்டு உறவுகள் குறித்து
முக்கிய முடிவுகள் மேற்கொள்ளப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த
அரசாங்கம் இந்தியாவுக்கு சீனா மூலமாக அழுத்தம் கொடுத்து இந்தியாவுடனான
ராஜதந்திர உறவுகளை வைத்திருந்த அதேவேளை மைத்ரி அரசு இந்தியாவைத்
திருப்திப்படுத்தும் வகையிலான உறவை ஆரம்பித்திருக்கின்ற போதிலும் ஏற்கனவே
இலங்கையில் பொருளாதார ரீதியாக காலூன்றியிருக்கும் சீனாவுடனும் தளர்வுப்
போக்கையே இதுவரை கடைப்பிடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


0 Comments