பைஷல் இஸ்மாயில் -
அரச அதிகாரிகள் தமது கடமைப் பொறுப்புகளிலிருந்து விலகியவர்களாக ஒருபோதும்செயற்படக்கூடாது. மக்களின் பணிகளை இலகுப்படுத்துவதற்காகவே அரசாங்கம் அரசஅதிகாரிகளை நியமித்து சேவை வழங்குவதற்கான அதிக வசதி வாய்ப்புக்களையும் செய்துவருகின்றதென கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் தெரிவித்தார்.
அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் நடமாடும்சேவை அட்டாளைச்சேனை அந்-நூர் வித்தியாலத்தில் இன்று சனிக்கிழமை (21) நடைபெற்றது.இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து அவர் உரையாற்றுகையில்,
கடந்த காலங்களில் பொலிஸாருக்கும் பொது மக்களுக்குமான உறவில் சற்று இடைவெளியானநிலைமை காணப்பட்டது. அந்த நிலைமைகள் இன்று மாறிவருகின்றது. பொலிஸாருக்கும்,பொதுமக்களுக்குமான உறவை மேன்மேலும் பலப்படுத்துவதன் மூலம் குற்றச் செயல்களைபாரியளவில் குறைத்துக் கொள்ள முடியும். பொதுமக்களுக்கு பொலிஸார் மீதுள்ள அச்சம்,சந்தேகமான நிலமைகள் மாறி நட்புறவை கட்டியெழுப்புவதுக்கான சந்தர்ப்பமாக இவ்வாறானமக்கள் நடமாடும் சேவைள் அமையும் என்பதில் ஐயமில்லை.
இவ்வாறான பல வேலைத்திட்டங்கள் மூலம் கடந்த யுத்தகால சூழ்நிலைகள் மற்றும் இயற்கைஅனர்த்தங்களினால் காணாமல் போன பிறப்புச் சான்றிதழ்கள், அடையாள அட்டைகள்,பொலிஸ் முறைப்பாடுகள் மற்றும் தீர்வெட்டப்படாத பல விடயங்களுக்கு மக்கள் தீர்வினைப்பெற்றுக்கொள்ள முடிகின்றது. இன்றய நவீன உலகில் காலம் மிகவும் அருமையாகவும்,பெறுமதிமிக்கவையாகவும் காணப்படுகின்றது. அந்த வகையில் அதிகாரிகளின் உதவிகளைதேடிவரும் மக்களின் அன்றாட பிரச்சினைகளை காலத்தை இழுத்தடிப்புச் செய்யாமல்அதிகாரிகள் உரிய தீர்வினை வழங்குவதற்கு சித்தமானவர்களாக இருக்க வேண்டும். என்பதுடன்அர்பணிப்புடன் சேவை வழங்குபவா்களாகவும் இருக்க வேண்டும் என்றார்.


0 Comments