புத்தளம் கல்வி வலயத்திற்குட்பட்ட தொண்டர் ஆசிரியர்கள் இன்று திங்கட்கிழமை காலை கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ் முஸ்லிம் மற்றும் சிங்களப் பாடசாலைகளில் தொண்டர் ஆசிரியர்களாக பல வருடங்களாக தொண்டர் ஆசிரியர்களாக கடமையாற்றி வரும் தங்களுக்கு நிரந்த நியமனங்களை வழங்க கோரியே இவர்கள் இந்த போராட்டத்தினை முன்னெடுத்தனர்.
புத்தளம் - சிலாபம் பிரதான வீதியின் ஐயனார் ஆலயத்திற்கு முன்பாக இன்று காலை 9.30க்கு தொண்டர் ஆசிரியர்களின் கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது.
இதற்கான தீர்வை பெற்றுக் கொள்வதற்கு ஒரு மாத காலத்தினுள் ஜனாதிபதியை சந்திக்க ஏற்பாடு செய்யப்படும் என்ற அதிகாரிகள் வழங்கிய உறுதியை அடுத்து கவனயீர்ப்பு போராட்டம் காலை 11.00 மணிக்கு முடிவடைந்தது.


0 Comments