அனைத்தும் வியாபார மயமாக ஆகிப்போன சமகாலத்தில் ஹஜ் மற்றும் உம்ரா சேவை நடாத்திவரும் ஒரு சில முகவர்களின் நிறுவனங்களின் செயற்பாடு ஒட்டுமொத்த உம்ரா மற்றும் ஹஜ் சேவையையே விமர்சனத்துக்கு உள்ளாக்கியுள்ளது.
கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் உம்ரா கடமையை நிறைவேற்ற அழைத்து செல்லப்பட்ட அறுவர் கொண்ட குழு (அறுவரும் பெண்கள்) ஜித்தா விமான நிலையத்தில் பொறுப்பேற்க கூட முகவர் நிலையத்தின் ஆட்கள் இல்லாமல் நிர்கதியாக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையில் இருந்து குறித்த முகவர் நிலையத்துக்கு கொடுக்கப்பட்ட அழுத்தத்தை தொடர்ந்து இரண்டு தினங்களுக்கு பின்னர் குறித்த முகவர் நிலையம் அந்த உம்ரா குழுவை நேற்று பொறுப்பேற்றுள்ளது .
குறித்த உம்ரா குழுவில் சென்ற பெண்களின் குடும்பத்தினர் இந்த விடயத்தை ஊடகங்களில் வெளியிட்டு இப்படியான மோசடிகளை வெளிச்சத்துக்கு கொண்டுவருமாறு எம்மிடம் கேட்டுக்கொண்டனர்.
களத்தில் இறங்கிய மடவளை நியூஸ் செய்தி குழு திரட்டிய தகவல்களின் படி பொதுபல சேனா அமைப்புடன் ஹஜ் விவகாரம் தொடர்பாக நீதி கேட்டு சென்ற குழுவில் பிரதான அங்கம் வகித்த ஒருவர் இந்த பின்னணியில் இருப்பது தெரியவந்தது.அதனை ஊஜிதப்படுத்த அவரை பல தடவைகள் தொடர்ப்புகொண்டும் எமக்கு பதில் கிடைக்கவில்லை.
இது தொடர்பாக ஜித்தாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலக அதிகாரி நியாஸ் அவர்களை நாம் தொடர்ப்புகொண்டு கேட்டபோது குறித்த இந்த விடயத்தில் சம்பத்தப்பட்ட முகவர் நிலையம் இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ளது எனவும் இவர்கள் வேறு பெயர்களில் விசாக்களை பெற்று முறைகேடுகளில் ஈடுபடுவதாக மடவளை நியுசுக்கு குறிப்பிட்டார்.
இதனை கண்டறிய குறித்த விசாக்களை பரிசீலித்து எந்த முகவர் பெயரில் இந்த மோசடிகளை நடத்துகிறார்கள் என்பது தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்து இந்த மோசடிகும்பளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாகவும் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட தரப்பை தம்முடன் தொடர்ப்புபடுத்தி தருமாறும் அவர் கோரி இருந்ததை தொடர்ந்து குறித்த சம்பத்தில் பாதிக்கப்பட தரப்பையும் நாம் ஜித்தா உயர்ஸ்தானிகர் அலுவலகத்துடன் தொடர்புபடுத்தினோம்.
அதனுடன் நின்றுவிடாமல் இது தொடர்பாக முஸ்லிம் கலாசார அமைச்சர் ஹலீம் இவர்களை தொடர்பு கொண்டு குறித்த விடயம் தொடர்பாக முறைப்பாடு ஒன்றை மேற்கொண்டதுடன் அவரின் பணிப்புரையின் பேரில் அமைச்சின் பணிப்பாளர் சமீல் அவர்களுக்கும் இது தொடர்பாக முறையிட்டுள்ளோம்.
இவ்விடயம் தொடர்பாக மடவளை நியுசுக்கு கருத்துவெளிட்ட அமைச்சின் பணிப்பாளர் சமீல் இது போன்ற எண்ணிலடங்காத சம்பவங்கள் இடம்பெறுவதாகவும் இந்த மோசடி கும்பல்களுக்கு எதிராக எவரும் முறையிடுவதில்லை என சுட்டிக்காட்டிய அவர் இது மோசடியில் ஈடுபடும் சில முகவர்களுக்கு சாதகமாக அமைவதாக குறிப்பிட்டார்.
இவ்விடயம் தொடர்பாக முஸ்லிம் கலாசார அமைச்சும் ஹஜ் கமிட்டியும் செயற்படும்விதம் திருப்திகரமாக இல்லை எனவும் விமர்சனங்களும் எழுத்துள்ளன..
முஸ்லிம்களின் ஐந்து கடமைமைகளில் ஒன்றான ஹஜ் மற்றும் புனிதமான உம்ரா சேவை முகவர்கள் மோசடிகளில் ஈடுபடுவதை தடுக்க பாதிக்கப்பட்டவர்களின் ஒத்துழைப்பு மிக அவசியமானதாகவும்.
உங்கள் பங்களிப்பினால் எதிர் காலத்தில் புனித கடமைகளை நிறைவேற்ற பணம் செலுத்தி அவதிப்பட காத்திருக்கும் பல்லாயிரக்கணக்கான அப்பாவிகள் காப்பாற்படுவர்..
(ஹஜ் உம்ரா முகவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் உங்கள் விபரங்களுடன் பேஸ்புக் மூலம் அல்லது ஈமெயில் மூலம் எம்மை தொடர்ப்புகொள்ளுங்கள்….)
நன்றி -மடவள நிவ்ஸ்-


0 Comments