Subscribe Us

header ads

இலங்கையின் 67 வது சுதந்திர தினத்தை சிறப்பிக்கும் வகையில் மாபெரும் சிரமதான நிகழ்வு பாலமுனையில் (PHOTOS)

பி. முஹாஜிரீன்


இலங்கையின் 67 வது சுதந்திர தினத்தை சிறப்பிக்கும் வகையில் சின்னப்பாலமுனை சுப்பர் ஒக்கிட் விளையாட்டுக் கழகத்தினால் சுதந்நதிர தினமான இன்று (04) புதன்கிழமை மாபெரும் சிரமதான நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

‘சுதந்திர தினத்தில் சுத்தமான தேசம்’ எனும் தொனிப் பொருளில் சுப்பர் ஒக்கிட் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் பி. முஹாஜிரீன் தலைமையில் நடைபெற்ற இச்சிரமதான நிகழ்வின் மூலம் சின்னப்பாலமுனை அல் ஹிக்மா வித்தியாலய மைதான வளாகம் உட்பட பொது இடங்கள் சுத்தம் செய்யப்பட்டன.

இந்நிகழ்வில் சுப்பர் ஒக்கிட் விளையாட்டுக் கழகத்தின் நிருவாகிகள் உள்ளிட்ட கழகத்தின் உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிரமதானப் பணியில் ஈடுபட்டனர்.






Post a Comment

0 Comments