முன்னாள் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தங்கியிருந்த உத்தியோகபூர்வ இல்லத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது உத்தியோகபூர்வ இல்லமாக பாவிக்க போவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகை உத்தியோகபூர்வ நிகழ்வுகளுக்கு மாத்திரமே பாவிக்கப்பட உள்ளதாகவும் அதனை இல்லமாக பாவிக்கப் போவதில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
அலரி மாளிகை மற்றும் ஜனாதிபதி மாளிகை ஆகியவற்றை தான் ஏற்றுக்கொள்ளப் போவதில்லையென ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


0 Comments