கட்டணத்தை வசூலித்து நீராடும் வசதியை வழங்கும் நிலையமொன்றில் நீராடிய வயோதிபர் ஒருவர், தனது பணப்பையை எடுத்து வர மறந்து விட்டதாக தெரிவித்து 6 வயது பேத்தியை அங்கு பிணையாக விட்டு விட்டு சென்ற சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது.
யுன்னான் மாகாணத்தில் குன்மிங் நகரிலுள்ள நீராடும் நிலையத்தில் தனது பேத்தியான சிய வோ வை பிணையாக வைத்து விட்டு சென்ற மேற்படி நபர், தனது கட்டணத்தை செலுத்துவதற்கு திரும்பி வராததால் அந்த சிறுமி தொடர்ந்து ஒரு மாத காலமாக அந்த நிலையத்திலேயே தங்கியுள்ளார்.
குறிப்பிட்ட வயோதிபர் வெதுவெதுப்பான நீரில் குளித்த பின்னர் உடலை பிடித்து விடுவதற்கான சேவையையும் பெற்றிருந்ததாக அந்த நிலையத்தின் முகாமையாளர் மீ வாங் (40 வயது) தெரிவித்தார்.
அந்த நிலையத்தின் சேவைகளைப் பெற்ற பின்னர் கட்டணம் செலுத்துமிடத்திற்கு சென்ற அந்த வயோதிபர், தனது பணப்பை வீட்டில் மறந்து வைத்து விட்டதாக தெரிவித்து தான் வீட்டிலிருந்து பணத்தை எடுத்து வரும் வரை தனது பேத்தியை அங்கு பிணையாக விட்டு சென்றுள்ளார்.
ஆனால் அவர் ஒரு மாத காலமாகியும் அந்த நிலையத்துக்கு திரும்பாததால் சிறுமி சியவோ அந்த நிலையத்திலேயே வாழ நேர்ந்துள்ளது.
தற்போது சியவோ அந்த நிலையத்திலுள்ள ஊழியர்களின் செல்லப் பிள்ளையாக மாறியுள்ளார்.


0 Comments