சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளைய தினம் சிறை கைதிகள் சிலர் ஜனாதிபதி பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்படவுள்ளனர்.
சிறை வைக்கப்பட்டுள்ள 75 வயதிற்கு மேற்பட்டவர்கள் நாளை (04) விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சிறு குற்றங்களில் சிறை வைக்கப்பட்டுள்ளவர்கள், அபராதம் செலுத்த முடியாதவர்கள் விடுதலை செய்யப்படவுள்ளனர். மேலும் தற்போது சிறை தண்டனை பெற்றுள்ளவர்களின் சிறை தண்டனை காலத்தில் ஒரு வாரத்தை குறைப்பதற்கும் சுதந்திர தினத்தை முன்னிட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


0 Comments