சவுதி அரேபியா மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் ஆலு ஸுஊத் மற்றும் முடிக்குரிய இளவரசரம் துணைப் பிரதமருமான சுல்தான் பின் அப்துல் அஸீஸ் ஆலு ஸுஊத் ஆகியோர் இலங்கையின் 67 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனவுக்கு வாழ்த்து தெரிவித்து ஒரு தந்திகள் அனுப்பியுள்ளதாக செய்திகள் குறிப்பிடுகின்றன.
இலங்கை ஜனாதிபதியின் சந்தோஷத்திற்கும் உடல்நலத்திற்கும் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ள மன்னர், இலங்கை அரசு மற்றும் மக்களின் நிலையான முன்னேற்றம் மற்றும் சுபீட்சத்திற்கும் பிரார்தித்துள்ளார்.
மேலும் ஜனாதிபதியின் சந்தோஷத்திற்கும் சுபீட்சத்திற்கும் பிரார்தித்துள்ள முடிக்குரிய இளவரசர், இலங்கை நாடும் மக்களும் மேலும் முன்னேற்றம், வளமடைய வாழ்த்தியுள்ளார்.
A.J.M. மக்தூம்


0 Comments