Subscribe Us

மைத்திரி – மோடிக்கிடையில் 45 நிமிட சந்திப்பு!


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு இடையிலான சந்திப்பு எதிர்வரும் 16ஆம் திகதி இந்தியா புதுடில்லி நகரத்தில் இடம் பெறவுள்ளது.

குறித்த சந்திப்பு 45 நிமிடங்கள் இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முதலாவது வெளிநாட்டு விஜயத்திற்கு ஜனாதிபதி தலைமையிலான குழு எதிர்வரும் 15ஆம் திகதி இந்தியா நோக்கி பயணிக்கவுள்ளது.

இப்பயணத்தின் போது சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, வெளியுறவு துறை அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் ஆகியோர் குறித்த விஜயத்தில் கலந்துகொள்ளவுள்ளனர்.

இதன்போது இந்தியா ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியுடன் கலந்துரையாடல் ஒன்றும் இடம் பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Post a Comment

0 Comments