Subscribe Us

header ads

மன்னார் கேஸ் இன்னும் 3 வருடங்களில் தெரியும்



மன்னாரின் கேஸை இன்னும் 3 வருடங்களில் முழு இலங்கையும் அனுபவிக்கும் என்று மின்சக்தி அமைச்சர் சம்பிக்கை நம்பிக்கைத் தெரிவித்துள்ளார். கனிம எண்ணெய் ஆய்வுக்காக இலங்கைக் கடற் பரப்பு எல்லைக்குள் 20 இடங்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவற்றின் அகழ்வுப் பணிகள் அங்கீகரிக்கப்பட்ட போட்டி முறையொழுங்குக்கு அமைவாக வழங்கப்படும் எனவும் அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரனவக்க குறிப்பிடுகின்றார்.

சென்ற அரசாங்கம் போன்று ஒவ்வொரு நாட்டுக்கும் அளுக்கொரு பங்கு முறையில் கனிம எண்ணெய்க் கினறுகள் வழங்கப்படமாட்டாது எனவும் அவர் கூறியுள்ளார்.

மன்னாரில் 'டொருடோ' கினற்றில் கேஸ் (இயற்கை வாயு) காணப்படுவதாகவும் அவை இன்னும் இரண்டு வருடங்களில் (2018-ல்) வனிகத் தேவைகளுக்காக பெற்றுக்கொள்ளப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

நன்றி: அத (சிங்கள ஊடகம்)

நன்றி-TPT-

Post a Comment

0 Comments