1560 : ஸ்கொட்லாந்தில் இருந்து பிரெஞ்சுக்காரரை வெளியேற்ற ஸ்கொட்லாந்துக்கும் இங்கிலாந்துக்கும் இடையில் பேர்விக் உடன்பாடு எட்டப்பட்டது.
1594 : பிரான்ஸின் மன்னனாக நான்காம் ஹென்றி முடிசூடினான்.
1617 : சுவீடன், ரஷ்யாவுக்கிடையில் உடன்டிக்கை கையெழுத்தியாகியது. இதன் மூலம் பால்டிக் கடல்பிராந்திலிருந்து ரஷ்யா விலகியது.
1700 : பப்புவா நியூகினி பிராந்தியத்தின் புதிய பிரித்தானியா தீவு கண்டுபிடிக்கப்பட்டது.
1801 : வாஷிங்டன், டிசி நகரம் அமெரிக்க காங்கிரஸின் நிர்வாகத்தின் கீழ் வந்தது.
1844 : டொமினிக்கன் குடியரசு ஹெயிட்டியிடம் இருந்து சுதந்திரம் பெற்றது.
1861 : போலந்தில் ரஷ்ய ஆக்கிரமிப்பை எதிர்த்து வோர்சாவில் மக்கள் எதிர்ப்புப் போராட்டம் நடத்தினர்.
1900 : தென்னாபிரிக்காவில் போவர்களின் தளபதி பியெட் குரோனியே நிபந்தனையின்றி சரணடைவதாக அறிவித்தார்.
1900 : பிரித்தானிய தொழிற் கட்சி அமைக்கப்பட்டது.
1933 : பேர்லினில் ஜேர்மனியின் நாடாளுமன்றம் தீ வைத்து எரிக்கப்பட்டது.
1942 : இரண்டாம் உலகப் போரின்போது ஜாவா கடலில் இடம்பெற்ற சமரில் கூட்டுப் படைகளை ஜப்பான் படைகள் தோற்கடித்தன.
1951 : ஐக்கிய அமெரிக்காவில் ஒருவர் இருதடவைகளுக்கு மேல் ஜனாதிபதித்
தேர்தலில் போட்டியிட முடியாதவாறு அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்பட்டது.
1967 : டொமினிக்கா ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து சுதந்திரம் பெற்றது.
1976 : முன்னாள் ஸ்பானிய நாடான மேற்கு சகாரா, சாராவி அரபு ஜனநாயகக் குடியரசு என்ற பெயரில் சுதந்திரப் பிரகடனம் செய்தது.
1991 : வளைகுடாப் போரில், குவைத் விடுதலையானதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ. புஷ் அறிவித்தார்.
2004 : பிலிப்பைன்ஸில் பயணிகள் கப்பலில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 116 பேர் கொல்லப்பட்டனர்.
2007 : மட்டக்களப்பு நகரில் உள்ள இலங்கை விமானப் படையினரின் விமான ஓடுபாதையை நோக்கி விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்ட எறிகணை வீச்சில் இலங்கைக்கான இத்தாலிய, அமெரிக்கத் தூதுவர்கள் காயமடைந்தனர்.
2010 : சிலியில் ஏற்பட்ட 8.8 ரிச்டர் அளவிலான பூகம்பதினால் 500 பேர்
பலியானதுடன் பல்லாயிரக்கணக்கானோர் காயமடைந்தனர்.
2013 : பிரான்ஸில் தொழிற்சாலையொன்றில் மீது துப்பாக்கிதாரியொருவர் மேற்கொண்ட தாக்குதல்களால் துப்பாக்கிதாரி உட்பட ஐவர் கொல்லப்பட்டனர். மேலும் ஐவர் காயமடைந்தனர்.


0 Comments