முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவின் மனைவி சஷி வீரவங்சவுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 20 வருட சிறைத்தண்டனை கிடைக்கும் வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிறப்பு அத்தாட்சிப் பத்திரம் மற்றும் கடவுச் சீட்டு ஆகியவற்றை போலியான முறையில் தயாரித்த சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு மாலபே தனியார் வைத்தியசாலை ஒன்றில் வைத்து கைது கைதுசெய்திருந்தனர்.
இவரை அடுத்த மாதம் 4ம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டிய இன்று உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


0 Comments