கடந்த 21 ஆம் திகதி (டிசெம்பர், 2014), புத்தளம் கலாசார மண்டபத்தில் எமது சமூகத்தை சார்ந்த ஏழை எளிய மாணவர்களுக்கான இலவச பாடசாலை உபகரணங்களை கொழும்பைச் சார்ந்த Tearz அமைப்பானது அன்பளிப்பு செய்தது.
அத்தியாவசிய பாடசாலை உபகரணங்களை பெற்றுகொள்ள சிரமப்படும் மாணவர்களைத் தெரிவு செய்வதிலும் நிகழ்ச்சி ஏற்பாட்டையும் புத்தளம் HITYP அமைப்பு வெற்றிகரமாக ஏற்பாடு செய்திருந்தது.
பாடசாலை உபகரணங்களை அன்பளிப்பு செய்த Tearz அமைப்புக்கும், கலாசார மண்டபத்தை இலவசமாக வழங்கிய பெரிய பள்ளித் தலைவர் அல்ஹாஜ் S .R .M முசம்மில் அவர்களுக்கும் HITYP அமைப்பு மனமார்ந்த நன்றிகளையும் பிரார்த்தனைகளையும் தெரிவித்து கொள்கிறது.
(HITYP Media)









0 Comments