Subscribe Us

header ads

கிழக்கு மாகாண சபை மு.கா குழுத் தலைவர் ஏ.எம் ஜெமீலினது பாதுகாப்பு கேள்விக்குறியில்

கிழக்கு மாகாண சபை உறுப்பினரும்,கிழக்கு மாகாண சபை மு.கா குழுத் தலைவருமான ஏ.எம் ஜெமீல் அவர்களிற்கு வழங்கப்பட்டு வந்த அனைத்து விதமான பாதுகாப்புக்களும் இன்று வியாழக் கிழமை காலை 10 மணியில் இருந்து அரசினால் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.இது வரை இவரிற்கென்று  5 மெய்ப்பாதுகாவலர்களும்,வீட்டிற்கு தனியான பாதுகாப்பும் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஒரு மாகாண சபை உறுப்பினருக்கு வழங்கப்பட வேண்டிய குறைந்தபட்ச பாதுகாப்பான 2 பொலிசார் கூட விலக்கப்பட்டுள்ளமை இவரினது பாதுகாப்பினை அதீத  கேள்விக் குறியாக்கியுள்ளது.ஏனைய மாகாண சபை உறுப்பினர்கள் எவரினதும் பாதுகாப்புக்களும் விலக்கப்படாது  இவரினது பாதுகாப்பு மாத்திரம் விலக்கப்படுள்ளமை  பலத்த சந்தேகங்களையும் மக்கள் மத்தியில் தோற்றுவித்துள்ளது.

இவர் அமைச்சர் ஹக்கீமுடன் மிக நெருக்கமானவர் என்ற வகையில் இந் நடவடிக்கையினை அரசு மேற்கொண்டுள்ளதாக அறிய முடிகிறது.


துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்

Post a Comment

0 Comments