களுவன்கேணி பிரதான வீதி எப்போது புணரமைத்து மக்களின் போக்குவரத்துக்கு விடப்படும் என இப்பாதையால் நடக்கும் ஒவ்வொரு பிரயாணிகளின் மனதில் எழுப்படும் கேள்வியாகும்.
களுவன்கேணி பிரதான வீதியானது யுத்தத்தின் பின்னராக கிழக்கு மாகாண சபை முதல் முதலாக தாவிக்கப்பட்டு முதலமைச்சராக இருந்த சந்திரகாந்தன் ஆட்சிக் காலத்தில் புணரமைத்துதருவதாக உறுதிமொழி வழங்கி முதல்கட்ட வேலைகள் இடம்பெற்றது.
முதல் கட்டவேலைகள் இடம்பெற்ற காலத்தில் இப் பிரதான வீதியை யார் புணரமைப்பது என்ற அரசியல் பின்னணியுடன் கூடிய நிலைப்பாட்டில் ஆரம்பிக்கப்பட்டது.
எது எவ்வாறாயினும் கிழக்கு மாகாணத்தில் இரண்டாம் முறையாக நடைபெற்ற மாகாண தேர்தலை ஒட்டிய பிரச்சாரத்தில் இவ் வீதி துரஸ்டவசமாக மாட்டிக்கொண்டது. களுவன்கேணி மக்களின் வாக்குகள் அளிக்கப்படவேண்டும், இரண்டாவது முறையாகவும் என்னை நீங்கள் முதலமைச்சராக கிழக்கு மாகாணத்திற்கு கொண்டு வந்தால் வீதி விரையில் புணரமைக்கப்படும் என சந்திரகாந்தனால் மக்களிடம் வாக்குறுதி அளிக்கப்பட்டது. மாகாண சபை கைகூடவில்லை, வீதிக்கான புணரமைப்பு பணிகள் ஸ்தம்பிதம் அடைந்தது.
களுவன்கேணி வீதி முன்னைய காலத்தில் தார் இடப்பட்டு புணரமைக்கப்பட்ட ஒரு பிரதான வீதி. களுவன்கேணி பிரதான வீதியினூடாக பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் மீன் வியாபாரிகள் என போக்குவரத்து செய்வது இப்பாதையினூடகவே நடைபெறுவது வழமை.
வீதி புணரமைத்து தரப்படும் என்ற நம்பிக்கையை மக்களுக்கு வழங்கிவிட்டு முதல் கட்டமாக கல்லுடன் கூடிய துசி படிந்த கலவையை அடிப்படை வேலையாக செய்ததின் காரணமாக வேலைகள் ஸ்தம்பிதம் அடைந்ததினால் வீதியால் செல்லமுடியவில்லை.
வீதியில் கொட்டப்பட்டுள்ள கல்லுடன்கூடிய துசி படிந்த கலவை மண் போக்குவரத்து செய்யும்போது பெரும் ஆசோகரியத்தை தருவதாக பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இவ் வீதியுடாக கார்ப்பிணி பெண்கள், பாடசாலை மாணவர்கள், நகரத்தில் இருந்து வரும் ஆசிரியர்கள், ஏனைய உத்தியோகத்தர்கள் மற்றும் நோயளிகள் என பல்வேறு பிரிவினர்களின் போக்குவரத்துக்கு பெரும் சிரம்தைக் கொடுப்பதாக மக்கள் மீண்டும் விசனம் தெரிவிக்கன்றார்கள். இவ் வீதிக்கான புணரமைப்பு பணிகளை முன்னெடுத்து தருமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளைக் கோட்டுக்கொள்கின்றனர் களுவன்கேணி வாழ் பொதுமக்கள்.
கடந்த வருடம் (2014.10.03) பாதையை புணரமைத்து தருமாறு கோரிக்கை விடுத்து களுவன்கேணி வீதியை மறித்து ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது ஆர்ப்பட்டாம் நடைபெற்ற இடத்திற்கு முன்னாள் ஜனாதிபதியின் ஆலோசகர் சந்திரகாந்தன் மற்றும் முன்னாள் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் முரளிதன், ஏறாவூர் பற்று பிரதேச செயலளர் உதயசிறிதர் ஆகியோர் ஆர்ப்பட்டம் நடைபெற்ற இடத்திற்கு வருகைதந்து மக்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படுத் என வாக்குறுதி அளித்தமை குறிப்பிடத்தக்கது.
0 Comments