ஏற்கனவே எதிர்வரும் 29ம் திகதி 10 அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சமையல் எரிவாயு விலைக்குறைப்பு சம்பந்தமாக விநியோகஸ்தர்கள் சங்கத்துடன் அரச தரப்பு தீவிர பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசாங்கத்தினால் வழங்கப்படும் சலுகைகள் மக்களைச் சென்றடைய வேண்டும் என்பதில் அமைச்சர்களும் ஆர்வத்துடன் செயற்படும் நிலையில் நுகர்வோர் சங்கத்திற்கான ஆணைக்குழு ஒன்றும் நியமிக்கப்பட வேண்டும் என அமைச்சர் ஜயவிக்ரம பெரேரா கருத்து வெளியிட்டுள்ளார்.
இதனடிப்படையில் விலை நிர்ணயம் குறித்தும் தரக்கட்டுப்பாடு குறித்தும் புதிய விதிமுறைகள் உருவாக்கப்படும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments