தற்போது ஆரம்பிக்கப்பட்டிருக்கும் தேர்தல் தினத்தன்று இடம்பெற்ற சதி நடவடிக்கை தொடர்பான விசாரணைகள் மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராக வந்தால் கட்சியில் வழங்கப்பட்டிருக்கும் ஆலோசகர் பதவி உட்பட அனைத்து கௌரவத்தையும் அவர் இழக்க நேரிடும் என அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
நேற்று மாலை இடம்பெற்ற சு.க மத்திய குழு கூட்டத்தைத் தொடர்ந்து இது தொடர்பான கருத்துப் பரிமாறல்கள் இடம்பெற்றுள்ளதுடன் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவை கட்சித் தலைவராக்கவும் பிறிதொரு குழு முயன்று வருகின்றது. தற்போது ஆலோசகர்களாக இரு முன்னாள் ஜனாதிபதிகளும் இருக்கும் அதேவேளை சந்திரிக்காவின் ஆளுமை அதிகரித்து வரும் நிலையில் மஹிந்த ராஜபக்ச தாக்குப் பிடிக்க முடியாது தனியாக ஒரு கட்சியை ஆரம்பிக்கும் சாத்தியக்கூறு அதிகரித்து வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments