(கட்டுரை சற்று நீளமானது என்பதற்காக முழுமையாக வாசிக்காமல் இருந்து விடாதீர்கள்)
புத்த, இந்து , கிறிஸ்தவ மத விவகாரங்களுக்கான அமைச்சுக்களுக்கு தனித் தனியாக நேற்று (12/01/2015) மூன்று அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ள அதே வேலை முஸ்லிம் விவகார அமைச்சராக நேற்று யாரும் நியமிக்கப் படவில்லை. எனினும் எ ஐக்கிய தேசிய கற்சி பாராளுமன்ற உறுப்பினர் ஹலீம் அவர்களை முஸ்லிம் விவகார அமைச்சராக நியமிக்க இருந்ததாகவும் அவர் அங்கு சமூகமளித்திருக்காத காரணத்தினால் இன்று (13/01/2015) அல்லது வரக்கூடிய வெள்ளிக்கிழமை ஹலீம் MP இற்கே அவ் அமைச்சுப் பதவி வழங்கப்பட இருப்பதாகவும் நம்பகமான சில ஊடகங்கள் மூலமாக பின்பு அறிந்து கொண்டேன். நீங்களும் அறிந்திருப்பீர்கள்.
ஹலீம் MP யுடன் எனக்கோ அக்குரணை மற்றும் அதனைச் சூழவுள்ள கல்ஹின்னை, கட்டுகஸ்தோட்ட, மடவள, உடத்தலவின்ன போன்ற ஊர்களில் வசிக்கும் ஹலீமை தாறுமாறாக விமர்சித்து வரும் பெரும்பாலான முஸ்லிம்களுக்கோ தனிப்பட்ட விதத்தில் எவ்வித கோபதாபமோ முரண்பாடோ கிடையாது என்பது உண்மை. எனினும் மறைந்த அக்குரனையை சேர்ந்த (ஹரிஸ்பத்துவ தொகுதி) முன்னாள் அமைச்சர் A C S ஹமீத் அவர்களின் பணி, பேச்சாற்றல், துடிப்பு , சேவை போன்றவற்றோடு ஒப்பிடும் போது ஹமீதின் பின்பு அவரது குடும்ப பின்னணியில் பாராளுமன்றம் சென்றுள்ள ஹலீம் விடையத்தில் பூச்சியம் என்பதைத் தவிர பீத்திக் கொல்வதற்கு ஒன்றுமே இல்லை. பாராளுமன்றத்தில் கொட்டாவி விடுவதற்கும், சாப்பிடுவதற்கும் மட்டுமே வாயைத் திறப்பவர் என்று ஹலீம் பலராலும் விமர்சிக்கப் பட்டு வருவது பலரும் அறிந்ததே.
அக்குரணை, கண்டி மற்றும் அவற்றை சூழ உள்ள பகுதிகளில் தவிர நாட்டின் ஏனைய அனைத்துப் பகுதிகளிலும் வாழும் மக்களில் பெரும்பாலானவர்களுக்கு ஹலீம் என்ற பெயரில் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் இருப்பது கூட தெரியாமல் இருக்கக் கூடும். (ஏனெனில் ஐக்கிய தேசிய கட்சி எதிர் கட்சியாக இருந்த பொழுதும் அது ஆழும் கட்சியாக இருந்த பொழுதும் அவர் நீண்ட காலமாக அக் கட்சியில் இருந்து வருகின்ற பொழுதும் அவர் பாராளுமன்றத்துக்கு உள்ளேயோ வெளியிலோ ............... ஒன்றுமே இல்லை என்ற நிலையில் எப்படி மக்கள் அவரைப் பற்றி அறிந்திருக்க முடியும் ??? )
அடுத்த தேர்தலில் கண்டிப்பாக இவர் வீட்டுக்கு அனுப்பப் பட வேண்டியவர். அக்குரணை மக்கள் இவருக்குப் பதிலாக கண்டிப்பாக துடிப்பான சமூக அக்கறை கொண்ட ஒருவரை அடுத்த தேர்தலில் பாராளுமன்றம் அனுப்ப வேண்டும். தனிப்பட்ட ஒருவரை தரக் குறைவாக விமர்சிக்கக் கூடாது எனினும் எந்த மார்க்க ஈடுபாடும் இல்லாத, முஸ்லிம்களை விட்டும் மிகவும் தூரமாகி குருகொட, அலவத்துகொட சிங்களவர்களோடு அன்னியோன்னியமாகி வசித்து வந்த அவர் தற்பொழுது மாவில்மட பகுதியில் போய் அதே Style இல் வசித்து வரும் இவ்வேளையில் இவர் கையில் முஸ்லிம் விவகார அமைச்சைக் கொடுத்தால் என்னவாகும் என்பதை விளங்கிக் கொள்ளும் நீங்கள் யாராவது சம்பந்தப் பட்ட ஆளும் அரசின் உயர் மட்டங்களின் கவனத்துக்கு இதனை கொண்டு செல்லும் பட்சத்தில் ஓரளவேனும் பொருத்தமான ஒருவர் முஸ்லிம் விவகார அமைச்சராக நியமிக்கப் பட வாய்ப்பிருக்கிறது என்ற ஒரே நோக்கத்துக்காகவே நான் இக்கட்டுரையை எழுதினேன் என்பதையும் ஹலீம் MP பற்றி தோலுரித்துக் காட்டி எதையாவது சாதித்துக் கொள்ள வேண்டும், கோபம் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் கடுகளவேனும் இதில் இல்லை என்பதையும் ரப்பு அல்லாஹ் நன்கரிந்தவனாவான். வேண்டுமெனில் அவருக்கு பொருத்தமான வேறு ஏதேனும் அமைச்சுப் பதவி வழங்கப் படலாம். எனினும் முஸ்லிம் விககாரம் ஆகவே ஆகாது.
நாட்டு முஸ்லிம்களுக்கு எதிராக தூண்டி விடப்பட்ட இனத் துவேச செயற்பாடுகள் அரசு மாறிய கையோடு அடங்கி போய் விட்டது என்று நினைப்பது முட்டாள் தனமானது. ஏனெனில் இனத் துவேசம் முற்றாக அடங்குவதற்கு BBS, ராவண பலய போன்ற அமைப்புக்கள் தடை செய்யப் படுவது மாத்திரம் போதுமாகாது. கடந்த சிலகாலமாக சும்மா இருந்த பௌதர்கள் எல்லாம் முஸ்லிம்களுக்கு எதிராக உசுப்பிவிடப்பட்டுள்ள நிலையில் நிலைமை கைகூடி வர சில வருடங்கள் கூட நாம் பொறுமை காக்க வேண்டி வரக் கூடும். ஆக இவ்வாறானதொரு நிலையில் தானும் தன்பாடாகவும், முஸ்லிம்களை விட்டும் மார்க்க விவகாரங்களை விட்டும் ஒதுங்கி மௌன விரதம் காத்து வாழும் இவரிடம் முஸ்லிம் விவகார அமைச்சைக் கொடுத்தால் ??? எனக்கு ஓரளவு அறிமுகமுள்ள சில முஸ்லிம் அரசியல் உயர் மட்டங்களிடம் இவ் விடையம் பற்றி இன்று சற்று தெளிவு படுத்தினேன். உங்களில் சக்தியுள்ளவர் இதனைச் செய்வது மிகப் பெரும் ஒரு சமூகக் கடமை என்பதை மறந்து விடாதீர்கள்.


0 Comments