விபத்துக்குள்ளான ஏர் ஏசியா விமானத்தின் கறுப்புப் பெட்டி ஜாவா கடலிலிருந்து மீட்கப்பட்டு இந்தோனேசியாவிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த கறுப்புப் பெட்டியிலிருந்து, விமான அறையில் விபத்து நடைபெறும் முன்னர் இடம்பெற்ற உரையாடல்கள் முதல், பலதரப்பட்ட விடயங்களை ஒலி மற்றும் ஒளி வடிவில் பெற்றுக் கொள்ள முடியும்.
இந்நிலையில் தற்போது மீட்கப்பட்ட கறுப்புப் பெட்டி ஒலி வடிவ தகவல்களை மட்டும் உள்ளடக்கியதாக காணப்படுகிறது.
இதேவேளை கடலுக்கடியிலிருந்து மீட்கப்பட்ட கறுப்புப் பெட்டி சேதமடையாமல் காணப்படுவதால் அதிலுள்ள தகவல்களை விரைவில் பெற்று விடலாம் என இந்தோனேசிய மீட்புப்படையினர் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
அத்துடன் புலன்விசாரணைகளுக்காக Jakarta விற்கு அனுப்பப்பட முன்னர் குறித்த கறுப்புப் பெட்டி தேசிய போக்குவரத்து பாதுகாப்பு குழு தலைவரிடம் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை காட்சிகள் பதிவாகும் கறுப்புப் பெட்டியும் விமானத்தின் வால் பகுதி கண்டெடுக்கப்பட்ட இடத்திற்கு அருகில் காணப்படும் என்று மீட்புப் படையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.


0 Comments