Subscribe Us

header ads

விமானம் கிளம்பலையே என்று EMERGENCY EXIT கதவை திறந்த பயணிகளுக்கு நேர்ந்த விபரீதம்.

சீனாவில் விமானம் ஒன்று புறப்பட தாமதமானதால் பயணிகள் ஆர்பாட்டத்தில் குதித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென் மேற்கு சீனாவின் யுன்னான் (Yunan)மாகாணத்தில் உள்ள குன்மிஸ் (Kunmis)நகரிலிருந்து தலைநகர் பெய்ஜிங்கிற்கு (Beijing)25 பேர் கொண்ட விமானம் ஒன்று புறப்படவிருந்தது.

ஆனால் பனிப்பொழிவு மிக அதிகமாக இருந்ததுடன், வானிலை மோசமாக இருந்ததால் விமானம் புறப்படுவதில் பல மணி நேரம் தாமதம் ஏற்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் விமான பணிப் பெண்கள் மற்றும் ஊழியர்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் மிகவும் எரிச்சலடைந்த அவர்கள் விமானத்தில் அவசர காலத்தில் பயன்படுத்தும் அவசர கதவை திறந்து வெளியேற முயன்றுள்ளனர்.

அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட 25 பயணிகளும் கைது செய்யப்பட்டனர். இதன்பின் இந்த விமானம் அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளது.

Post a Comment

0 Comments