ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு தெரிவித்து தற்போது இணைந்து வரும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சு பதவிகள் வழங்கப்பட்டால் 24 மணிநேரத்தில் ஐ.தே.கட்சியின் அனைத்து பதவிகளில் இருந்து விலக போவதாக ஊவா மாகாண எதிர்க்கட்சித் தலைவர் ஹரின் பெர்ணான்டோ திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சஜின்வாஸ் குணவர்தன, விநாயகமூர்த்தி முரளிதரன், உதித்த லொக்குபண்டார, அனுர விதானகமகே ஆகியோருக்கு அமைச்சு பதவிகள் வழங்கப்பட்டால் விலக போவதாக ஹரின் பெர்ணான்டோ அறிவித்துள்ளார்.-ABDUL WAHID-


0 Comments