Subscribe Us

header ads

எனது முதலாவதும் இறுதியுமான ஜனாதிபதிப் பதவி இதுவாகும்..

-JM Hafeez-

முதலாவதும் இறுதியுமான எனது ஜனாதிபதிப் பதவியின் ஊடாக உண்மையான ஒரு மக்கள் சேவகனாகப் பணியாற்றுவதற்கு புனிதமிகு பூமியிலிருந்து உறுதி பூண்ணுவதாக ஜனாதிபதி மைந்திரிப்பால சிரிசேனா தெரிவித்தார்.

(11.1.2015) கண்டி ஸ்ரீ தலதா மாளிகை முன் தேச மக்களுக்கு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது-

எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்ட பிரகாரம் எமது கொள்கையை விளங்கி எமக்கு வாக்களித்த சகல மக்களுக்கும் நன்றி தெரிவிக்கின்றேன். அதன் உண்மையான வெற்றியை நாம் அமைதியாகக் கொண்டாடுவதன் மூலமே அடைய முடியும்.

நல்ல சிந்தனை கொண்டவர்களாக இருந்து பணியாற்றும் போதே எமது பணி நல்லதாகும். அதே போல் எம்மில் தீய சிந்தனை வருமாயின் அதுவும் தீயாதாகவே முடியும்.இயற்கைக்கு நாம் மதிப்பளிக்க வேண்டும். எமது நீர் நிலைகள் எமது இயற்கையின் அருட்கொடைகள். இலங்கை ஒரு விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட நாடு .எனவே எமக்குப் பொருத்ததமான விவசாயக்கட்டமைப்புக்களை உருவாக்கவேண்டியுள்ளது.

எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறிய படி எல்லையற்ற அதிகாரத்தை நீக்கி ஆணைக்குழுக்களுக்கு அதிகாரங்களைப் பகிர உள்ளோம்.  சர்வதேச நாடுகளுக்கிடையே அண்யோண்ய உறவைப் பேணிப்பாது காப்போம்.

எனது முதலாவதும் இறுதியுமான  ஜனாதிபதிப் பதவி இதுவாகும். எனவே நான் அதை உரிய காலத்தில் நேர்மையாக நிறைவேற்றுவதாக உறுதி அளிக்கின்றேன்.

எமது நாட்டிலுள்ள சகல சமயங்களுக்கிடையேயும் சமத்துவமும் நீதியும் சுதந்திரமும் ஏற்பட  வேண்டும். எமது அரச துறையை சக்தி உள்ளதாக மாற்றவேண்டும். எமக்கு அதிகளவு வெளிநாட்டு செலாவணியை கொண்டு வந்த சேர்க்கும் 25 இலட்சம் பேர்களைக் கொண்ட வெளிநாட்டுத் தொழிற்துறையை வளம் படுத்தவேண்டியுள்ளது என்றார்.

Post a Comment

0 Comments