Subscribe Us

header ads

சகல பாராளுமன்ற உறுப்பினர்களையும் அரசாங்கத்துடன் ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு….

-எம்.எம்.எம். ரம்ஸீன்-

நாட்டில் நல்லாட்சியை உறுதிப்படுத்தி நாட்டைக் கட்டியெழுப்ப சகல பாராளுமன்ற உறுப்பினர்களையும் அரசாங்கத்துடன் ஒன்றுபடுமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அழைப்பு விடுத்தார். 

கண்டி தலதா மாளிகையில் இருந்து நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில், பாராளுமன்றத்தைப் பிரதிநித்துவப்படுத்தும் சகல கட்சிகளையும் பாராளுமன்ற உறுப்பினர்களையும் எம்முடன் ஒன்றுபடுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

நாட்டு மக்களுக்காகவும் எதிர்கால சந்ததியினருக்காகவும் நாட்டின் பாரம்பரியத்தை பாதுகாக்கவும் கட்டியெழுப்பவும் ஒன்றுபட்டு செயற்பட முடியும். அத்துடன் நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்தி மக்களின் சுதந்திரம் , ஜனநாயகத்தை உறுதிப்படுத்தவும் சர்வகட்சிகளையும் பாராளுமன்ற உறுப்பினர்களையும் எங்களுடன் ஒன்றுபடுமாறு அழைக்கின்றேன். இந்த அழைப்பை நாட்டின் நன்மை கருதி சகல அரசியல் கட்சிகளும் ஏற்றுக் கொள்ளும் என்று நம்புகின்றேன். 

நாட்டு மக்களுக்கு இந்த இடத்தில் இருந்து உரையாற்றக் கிடைத்தமை மிகப்பெரும் பாக்கியமாகும். எனக்கு வெற்றியைப் பெற்றுத் தந்தமைக்கு மக்களுக்கு நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன். இந்த வெற்றி மக்களின் வெற்றியாகும். அமைதியான தேர்தல் மூலம் பெற்றுக் கொண்ட இந்த வெற்றி நாட்டின் அரசியல் , பொருளாதார, சமூக அபிவிருத்திக்கு பெரிதும் உதவும் என்று நம்புகின்றேன்.

மக்களின் முக்கிய பிரச்சினையாக காணப்படும் பொருட்களின் விலையுயர்வு மற்றும் பொருளாதார நெருக்கடி என்பவற்றை ஒழித்து சக்தியுள்ள பொருளாதாராத்தை கட்டியெழுப்ப முதலில் நடவடிக்கைகள் எடுக்கப்;படும். அத்துடன் நாட்டில் சுதந்திரம் ஜனநாயம் தொடர்பாக கவனம் செலுத்தி தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறியவாறு நிறைவேற்று அதிகாரம் பற்றி கவனம் செலுத்தப்படும். மேலும் சுயாதீன ஆணைக்கு விடயங்களில் கவனம் செலுத்தப்படும்.

எமது சுயாதீன தனித்துவத்தை உறுதிப்படுத்தி சர்வதேசத்துடன் நல்லுறவுகளை கட்டியெழுப்பவும் சர்வதேசத்தில் சகல சமூகங்களுடன் உறவுகளை கட்டியழுப்பி அதன் மூலம் நாட்டின் அபிவிருத்திக்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும்.


நமது நாடு பௌத்த நாடு என்ற அடிப்படையில் பௌத்த சாசனத்தை முதன்மைப்படுத்தி ஏனைய சகல மதங்களினதும் சுதந்திரத்தை உறுதிப்படுத்துவோம். நாட்டில் சகல இனங்கள் மதங்கள் மத்தியில் புரிந்துணர்வை கட்டியெழுப்புவோம்.

அத்துடன் நமது நாடு விவசாய நாடு என்ற அடிப்படையில் விவசாயத்துறையை நவீன விஞ்ஞான தொழிநுட்பத்துடன் அபிவிருத்தி செய்து விவசாயிகளை சக்திப்படுத்துவோம். இதன் மூலம் தேசிய பொருளாதாரத்தை கட்டியnழுப்ப முடியும். 

அரச ஊழியர்களின் பொருளாதாரத்தை உயர்த்துவதுடன் அரச ஊழியர்களின் சேவையை சிறப்பாக ஆற்ற பொருத்தமான சூழல் ஏற்படுத்தப்படும். தனியார் துறை ஊழியர்களின் நிலையையும் அபிவிருத்தி செய்வோம். 

நமது நாட்டுக்கு வெளிநாட்டு செலாவணி வருமானத்தைப் பெற்றுத் தரும் 25 லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களின் நன்மைகளை அதிகரிக்கவும் அவர்களின் தனிப்பட்ட வருமானத்தை அதிகரிக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். நமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறப்பட்டுள்ள 100 திட்டம் மற்றும் வேலைத்திட்டங்களை நாட்டுக்காக முன்னெடுப்போம். 

அபிவிரு;தி வேலைத்திட்டங்களில் நிறைந்திருக்கும் இலஞ்சம் , ஊழல் என்பவற்றை முற்றாக ஒழிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுவதுடன் நல்லொழுக்கமுள்ள சமுதாயத்தை கட்டியெழுப்பவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இது நான் சுதந்திர சதுக்க உரையில் குறிப்பிட்டவாறு இது எனது முதலாவதும் மற்றும் இறுதியுமான ஜனாதிபதி தேர்தலாக இருக்கும். எனது பதவியின் மூலம் மக்களுடன் நெருக்கத்தை ஏற்படுத்தி முழு மனித சமூகத்திற்கும் நன்மை செய்ய முன்வருவேன். மனிதன் மனிதர்களுக்கு மட்டுமன்றி சகல உயிர்களுக்கும்; அன்பு செலுத்த வேண்டும். இவை யாவற்றையும் பாதுகாக்க வேண்டும். 

ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை அமைதியாக அநுபவிக்க வேண்டும். நாட்டில் சில சில இடங்களில் சிறு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. எனவே சகோதரத்துவத்துடன் செயற்பட்டு நாட்டில் முன்மாதிரியான சமூகத்தை கட்டியெழுப்ப முன்வருவோம் என்றார்

Post a Comment

0 Comments