Subscribe Us

header ads

ஹோட்டலில் அடைக்கப்பட்ட பிச்சைக்காரர்கள் : பாப்பரசர் வருகையால்.


பாப்பரசர் பிரான்சிஸ் கடந்த 15 முதல் 19–ம் திகதி வரை பிலிப்பைன்ஸ் நாட்டில் 4 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். 

தலைநகர் மணிலாவில் அவரை 60 இலட்சம் மக்கள் திரண்டு வந்து வரவேற்று வரலாற்று சாதனையை ஏற்படுத்தினர். 

அதே நேரம் மணிலாவில் வீடுகளின்றி வீதியோரம் தங்கியிருப்பவர்களும், பிச்சைகாரர்களும் பாப்பரசர் கண்ணில் படாமல் மறைத்து வைக்கப்பட்டனர். 

சுமார் 490 பிச்சைக்காரர்கள் மற்றும் வீடுகள் இல்லாதோர் வீதிகளில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டனர். மலை பகுதியில் உள்ள ‘குளு குளு’ (ஏ.சி.) ஹோட்டலில் அடைத்து வைக்கப்பட்டனர். 

பிலிப்பைன்ஸ் நாட்டில் பாப்பரசர் தங்கி இருந்தவரை அவர்களுக்கு ராஜமரியாதையுடன் உணவு வழங்கப்பட்டது. அவர் நாட்டைவிட்டு புறப்பட்டதும் அவர்கள் ஹோட்டலில் இருந்து வெளியேற்றப்பட்டனர். 

இந்த தகவலை பிலிப்பைன்ஸ் பாராளுமன்றத்தின் பிரதிநிதித்துவ சபை உறுப்பினர் டெர்ரி ரிடான் தெரிவித்தார். 

பாப்பரசர் பிலிப்பைன்ஸ் மக்கள் அனைவரையும் சந்திக்க விரும்பினர். ஆனால் அரசு ஏழை எளிய மக்களையும், பிச்சைக்காரர்களையும் மறைத்து விட்டது. 

எனவே, இந்த விவகாரம் குறித்து, பாராளுமன்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினர். இடது சாரியான பேயான் கட்சியின் செக்ரட்டரி–செனேரல் ரெனாடோ ரேயெஸ் கூறும் போது, அரசு வறுமையை மறைத்து விட்டது என குற்றம் சாட்டினார்.

Post a Comment

0 Comments