இன்று பகல் நடந்த புத்தளம் மாவட்ட அரசியல் குழுவின் மீதான தாக்குதலில் காயமடைந்த மூன்று உறுப்பினர்களும் தொடர்ந்து கடும் வருத்தமுடன் இருப்பதாக புத்தளம் தள வைத்தியசாலை வட்டார தகவல்கள் கூறின.
தள வைத்தியசாலையின் 7 ம் வாட்டில் அனுமதிக்கப்பட்டிருக்கும் விழிப்புணர்வுக் குழுவின் முக்கியஸ்தர்களான பொறியியலாளர் ரின்சாத், தகவல் தொழில் நுட்ப வல்லுநர் ருஸ்தி, வர்த்தகர் ரியாஸ் ஆகியோர் மீது நடத்தபட்ட கண்மூடித்தனமான தாக்குதலை அடுத்தே இவர்கள் பாதிப்புக்குள்ளாகி இருப்பதாக அத்தகவல்கள் மேலும் கூறின. ” எமது வைத்தியர்கள் தகுந்த சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளார்கள். ஏதும் சீரியசான பிரச்சனைகள் ஏற்படின் அதற்கான மற்று ஏற்பாடுகளுக்கு தயாராக உள்ளதாக அதிகாரி ஒருவர் புத்தளம் டுடேக்கு கூறினார்.
இதேநேரம் . புத்தளம் மாவட்ட அரசியல் குழுவின் தாக்குதலில் காயமுற்றதாக கூறி நகர சபை உறுப்பினர் முஜாஹிதுல்லாஹ் ஊடாக 4 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி கூறினார்.
பாரிஸ் , ஆதுல்சான் , அலி உற்பட இன்னொருவரும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.பொலீஸ் வாகன்னமோன்றிலேயே இவர்கள் வைத்திசாலைக்கு கொண்டு வரப்பட்டதாக கூறப்படுகிறது.
இதே நேரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஒரு PPAF உறுப்பினர் மீது வைத்தியசாலையில் வைத்தே கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் அறிய வருகிறது. இது சம்பந்தமாகவும் அந்த அதிகாரி கருத்து வெளியிட்டார். நோயாளிகளை யாரும் அச்சுறுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது . நாங்கள் இந்த விடயத்தில் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுவோம், உறிய பாதுகாப்பு இப்படியான பயமுறுத்தல்களை மேற்கொள்ள அனுமதிக்க முடியாது என்று அவர் கூறினார்.-Puttalam Today-

0 Comments