முன்னாள் பிரதமர் உள்ளிட்ட ஆளும்கட்சியின் மூன்று முக்கிய பிரமுகர்கள் எதிரணியில் இணைந்துக் கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னாள் பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர் சுதர்ஷினி பர்னாந்துபுள்ளே மற்றும் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் லசந்த அழகியவன்ன ஆகியோரே எதிரணியுடன் இணைந்து கொள்வார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவின் இல்லத்தில் சந்தித்து எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கான ஆதரவை வெளிப்படுத்துவார்கள் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.


0 Comments