மியன்மார் கடும்போக்கு பௌத்த அமைப்பின் தேரர்களுள் ஒருவரான அசின் விராது தேரர் தெரிவித்துள்ள கருத்தை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் செய்யித் ராத் அல் ஹுசைன் கண்டித்துள்ளார்.
அசினின் கருத்தை கண்டிக்குமாறு மியன்மார் அரசாங்கத்தையும் சகல அமைப்புக்களையும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் வேண்டுகோள் விடுத்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று அறிவித்துள்ளது.
மியன்மாரிலுள்ள சிறுபான்மை சமூகமொன்றை சந்திப்பதற்காக அந்நாட்டுக்கு விஜயம் மேற்கொண்ட தென் கொரியாவுக்கான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பிரதிநிதி யன்ங்லி என்பவரை ஒரு விபச்சாரி என அசின் விராது தேரர் திட்டியுள்ளார். அத்துடன், தேவையற்ற வார்த்தைப் பிரயோகங்களையும் இவருக்கு எதிராக அசின் பயன்படுத்தியுள்ளார்.
இந்த கடும்போக்கு தேரரின் கூற்று தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மியன்மார் அரசாங்கம் அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த அசின் தேரரின் செய்தியை வெளியிட்ட சர்வதேச ஊடகங்கள், குறித்த தேரர் கடந்த வருடம் இலங்கை வந்தபோது எடுத்துக் கொண்ட தேரரின் புகைப்படத்தையே பயன்படுத்தியுள்ளதாகவும் சிங்கள ஊடகமொன்று சுட்டிக்காட்டியுள்ளது.


1 Comments
முஸ்லிம்களின் பிரார்த்தனையை படைப்பாளன் ஏற்றுக் கொள்கின்றார்.அப் பிரார்த்தனைதான் இவர்களின் (எமது எதிரிகளின் ) வீழ்ச்சிக்கு வழி சமைக்கின்றது.
ReplyDelete