Subscribe Us

header ads

சிறுபான்மையினரை எதிர்த்தால் என்ன விளைவு ஏற்படும் என்பதை இத் தேர்தல் வெளிப்படுத்தி இருக்கும்.

aluthgama 4444
-முஹம்மட் றின்ஸாத்
கடந்த காலங்களில் இந்த  இலங்கை திரு நாட்டில் சிறுபான்மை இணங்களுக்கு எதிரான பல சதிகள் கட்டவிழ்த்து விடப் பட்டிருந்தன என்பதனை நாம் அனைவரும் அறிவோம் அது என்ன ஒன்றா இரண்டா என்னிலடங்கா பிரச்சினைகள் அவைகளில் சிலவற்றை கட்டாயம் இத்தருனத்தில் குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்.
(அளுத்கம,பேருவளை சம்பவம் மற்றும் பொது பலசேனவின் அட்டகாசம் பள்ளிவாசல்கள் உடைப்பு , ஹலால் பிரச்சினை , மாடு அருப்பதர்க்கு தடை போன்ற என்னிலடங்கா பிரச்சினைகள் சிறுபான்மை இணங்களை அழித்து வந்தன எங்களுடைய பிரச்சினைகளை யாரிடம் சொன்னாளும் தீர்வு கிடைக்க வில்லை எங்களைப் பொருத்தவரை எங்கள் முறையீடுகளை தீர்ப்பபதர்க்கு பொருத்தமானவன் மட்டும் அல்ல தகுதியானவனும் அல்லாஹ் ஒருவன்தான் அவனிடம் எங்கள் பிரச்சினைகளை கூறி அழுதோம்.
அதற்கு பதிலும்  வந்தது அதுதான் நேற்று நடாந்து முடிந்த 7வது ஜனாதிபதி தேர்தல் எங்களிடம் உள்ள வாக்கு பலம் தான் எங்களது ஆயுதமாக இருந்தது அதனை சரியான தருனத்தில் சரியாக பயன்படுத்திக் கொண்டோம் அதன் விளைவாகத்தான் இன்று இந்த திரு நாட்டில் புது யுகம் மலர்ந்து இருக்கிரது. சென்ற ஆட்சியில் தான் எங்களுக்கான சுதந்திரங்கள் பறிக்கப் பட்டன தற்போது மலர்ந்துள்ள ஆட்சியிலாவது முழுமையான சுதந்நிரம் பொதுபல சேனாவின் அட்டகாசம் இல்லாத அனைத்து இனங்களும் சுமுகமாக வாழும் ஒரு யுகம் மலருமா என எதிர்பார்த்து இருக்கின்ரோம்..
கட்டாயமாக இன்னும் ஒரு விடையத்தையும் கூறவோண்டும்
கடந்த தேர்தல் பிரச்சாரங்களில் பல அமைச்சர்கள் சொன்னார்கள் சிறுபான்மையினரின் வாக்குகள் எங்களுக்கு தேவையில்லை அவர்கள் எங்களுக்கு வாக்களித்தாளும் பிரயோசனப்படாது நாங்கள் தான் வெற்றியாளர்கள் என மார்பு தட்டி சொன்னவர்கள் இப்போது என்ன சொல்கிரீர்கள் சிறுபான்மையினரின் வாக்குகள் தேவையா . இல்லையா
சிறுபான்மையினரை எதிர்த்தால் என்ன நடக்கும் என்பதனை புரிந்து கொண்டு அனைத்து மக்களையும் சமாதானமாகவும் சுதந்திரமாகவும் வாழ விடுங்கள் ..

Post a Comment

0 Comments